ஈரோடு: ” விஜய் ஆதரவுடன் முதல்வராகி 5 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதிக்க அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் முயற்சி செய்தார்,” என தவெக மாநிலக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசியதாவது: விஜய் ஆதரவுடன் முதல்வராகி 5 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதிக்க இபிஎஸ் திட்டமிட்டார். ஆனால், அதனை நான் முறியடித்ததால் என் மீது கொலை வெறியில் உள்ளார்.10 முறை தோல்வி கண்டவர் இபிஎஸ்.
அவர் துரோகி என என்னை சொல்கிறார். நான் முதல்வர், பொதுச்செயலர் பதவியை விட்டு கொடுத்ததால் கிடைத்த பரிசு துரோகி. முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்தவன் துரோகி.எனக்கு பின் கட்சிக்கு வந்து பொதுச்செயலாளர் ஆன பிறகு கட்சிக்காக உழைத்தவர்களை நீக்கி வருகிறார். மக்கள் என்ன நினைக்கின்றனர் எனத் தெரியவில்லை. மக்கள் விசில் சின்னத்துக்கு ஓட்டுப்போட்டு என்னை வெற்றி பெற வைக்க நினைக்கின்றனர். இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.
