கொல்கட்டா: ஈஸ்ட் பெங்கால், கேரளா அணிகள் மோதிய ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டி 1-1 என ‘டிரா’ ஆனது.
ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் 12வது சீசன் நடக்கிறது. கொல்கட்டாவில் நடந்த லீக் போட்டியில் ஈஸ்ட் பெங்கால், கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின. ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் கிடைத்த ‘பெனால்டி’ வாய்ப்பில் ஈஸ்ட் பெங்கால் அணியின் யூசுப் எஜ்ஜேஜாரி ஒரு கோல் அடித்தார்.
‘ஸ்டாப்பேஜ்’ நேரத்தில் (90+2வது நிமிடம்) கேரளா அணிக்கு முகமது அஜ்சால் ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
இதுவரை விளையாடிய 5 போட்டியில், 2 வெற்றி, 2 ‘டிரா’, ஒரு தோல்வி என, 8 புள்ளிகளுடன் ஈஸ்ட் பெங்கால் அணி 3வது இடத்துக்கு முன்னேறியது. இம்முறை கேரள அணிக்கு முதல் புள்ளி (5 போட்டி, ஒரு ‘டிரா’, 4 தோல்வி) கிடைத்தது.
பெங்களூருவில் நடந்த மற்றொரு லீக் போட்டியில் பெங்களூரு, மோகன் பகான் அணிகள் மோதின. இப்போட்டி கோல் எதுவுமின்றி ‘டிரா’ ஆனது.
