கோல்கட்டா: ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் ஈஸ்ட் பெங்கால் அணி 4-1 என, டில்லி அணியை வீழ்த்தியது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 12வது சீசன் நடக்கிறது. கோல்கட்டாவில் நடந்த லீக் போட்டியில் ஈஸ்ட் பெங்கால், ஸ்போர்டிங் கிளப் டில்லி அணிகள் மோதின.
ஆட்டத்தின் 4வது நிமிடத்தில் டில்லி அணியின் அகஸ்டின் லால்ரோச்சனா ஒரு கோல் அடித்தார். இதற்கு, 7வது நிமிடத்தில் ஈஸ்ட் பெங்கால் வீரர் எட்மண்ட் லால்ரிந்திகா ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். பின், 12வது நிமிடத்தில் ஈஸ்ட் பெங்கால் அணிக்கு கிடைத்த ‘பெனால்டி’ வாய்ப்பில் யூசுப் எஸ்செஜ்ஜாரி ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து அசத்திய இவர், 40வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் ஈஸ்ட் பெங்கால் 2-1 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியின் ‘ஸ்டாப்பேஜ்’ நேரத்தில் (90+3வது நிமிடம்) ஈஸ்ட் பெங்கால் அணியின் மிகுவல் பிகுவேரா ஒரு கோல் அடித்தார். கடைசி நிமிடம் வரை போராடிய டில்லி அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் ஈஸ்ட் பெங்கால் அணி 4-1 என்ற கோல் கணக்கில், தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்தது.
ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் நடந்த மற்றொரு போட்டியில் ஜாம்ஷெட்பூர், பஞ்சாப் அணிகள் மோதின. இதில் ஜாம்ஷெட்பூர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
