”உங்களுக்கு நீதி கேட்க வந்த எனக்கும் சேர்த்து நீதி வேணும்”-திருச்சியில் விஜய் பரப்புரை

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாகப் பரப்புரையில் இறங்கியுள்ளன. இதனிடையே, தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. விடுமுறை நாட்கள் போக வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் ஒரு நாளே இருப்பதால் வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேபோல் பிரச்சாரத்திலும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இத்தகைய சூழலில் தான் தேர்தலை முன்னிட்டு திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட, த.வெ.க. தலைவரும் நடிகருமான விஜய் தனது வேட்புமனுவை இன்று (02.04.2026) தாக்கல் செய்தார். இதனையடுத்து திருச்சி கிழக்கில் பரப்புரையை தொடங்குவதற்கு முன்பு எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட மரக்கடை பகுதியில் விஜய் வாக்கு சேகரித்தார்.

விஜய் பேசுகையில், ”திமுக ஏலத்தில் எடுத்திருக்கிற கல்லாப்பெட்டி கூட்டணியுடன், நாம் ஏற்கனவே சொன்ன அந்த மற்றும் பலர் கூட்டணியோடு கள்ளக் கூட்டணி போட்டுக்கிட்டு எல்லாரும் ஒன்னா சேர்ந்து விஜய்யை எப்படி எல்லாம் எதிர்க்கிறாங்க என்று நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியவேண்டும் என்று அவசியம் இல்லை. இந்த கரூர் நிகழ்ச்சி சூழ்ச்சி என பலர் சொல்வது மாதிரி நம்ம கடைசி படமான ஜனநாயகன், அதுதான்  நம்ம மனசுக்கு நெருக்கமான உங்க எல்லாரோடும் நமக்கு இருக்கிற பூர்வ ஜென்ம பந்தத்தை இன்னமும் எங்கே இறுக்கமா மாற்றிடுமோ என்று, அது இந்த தேர்தலில் நமக்கு மிகப்பெரிய ஆயுதமாக மாறிடுமோ ஒரு என்று கூட்டு சூழ்ச்சியோடு இன்னும் பல பல சூழ்ச்சிகள் செய்கிறார்கள்.

அதனால் உங்க மகன், உங்க அண்ணன், உங்க தம்பி, உங்க விஜய் கேட்கிறேன் உங்களுக்காக நீதி கேட்க வந்த எனக்கும் சேர்த்து தான் நீதி வேண்டும். அவர்கள் கொள்ளை அடிக்க இதுவரைக்கும் எப்படி உங்களை ஏமாத்திட்டு இருக்காங்க தெரியுமா? இந்த காங்கிரஸில் இருக்கும் சிலரை கையில, சாரி பணப்பையில போட்டுக்கிட்டு சிறுபான்மை மக்களை ஏமாற்ற ஒரு நேரடி பாதி கதர் கூட்டணி. அதேபோல் இந்த மற்றும் பலர் கூட்டணி என்று ஒன்னு இருக்கு. அதோட டெல்லி ஓனரோட ஒரு கொள்ளைப்புற கள்ளக் கூட்டணி. அதாவது பாதி காவி.  ”கொள்கை கொள்கை” என்று ஏமாத்துறாங்க. அதனால இந்த திமுகவையும் நம்பாதீங்க இந்த பாஜகவையும் நம்பாதீங்க. இரண்டு பேரும் வேற வேற கூட்டணி எல்லாம் கிடையாது. ஒரே கூட்டணிதான். இரண்டு பேரையும் நம்பாதீங்க. இதுல எந்த டவுட்டும் உங்களுக்கு வேண்டாம்.

நீங்க திமுகவுக்கு ஓட்டு போட்டாலும் சரி, அந்த மற்றும் பலருக்கு நீங்க ஓட்டு போட்டாலும் சரி, நீங்க யாருக்கு ஓட்டு போடுவதற்கு சமம் என்று நீங்களே புரிஞ்சுக்கோங்க. அதனால இந்த வரப்போற தேர்தலில் டிவிகேக்கு உங்க சப்போர்ட்டை கொடுங்க. இன்னும் பல வருஷத்துக்கு தமிழ்நாடு சூப்பரா இருக்கும். அப்பறம் நான் ஒரு விஷயத்தை திருப்பி ரிப்பீட் பண்றேன் என்று சொல்லி யாரும் தவறாக எடுத்துக்க வேண்டாம். ஏன்னா அது என்னுடைய கடமை. ஒவ்வொரு ஊருக்கும் போய் நான் ரிப்பீட் பண்ண சொல்லியே ஆகணும். ஏப்ரல் 23ஆம் தேதி சும்மா காலையில் பக்காவா ரெடி ஆகி, முதல் ஆளாக போய் பூத்துல போய் நின்னு அந்த விசில் சின்னத்திற்கு நேராக இருக்கிற அந்த பட்டனை ஒரு அழுத்து அழுத்துங்கள். உங்க வீட்ல இருக்கிற ஒவ்வொருத்தரையும் அழைச்சிட்டு போங்க. ஒருவேளை வெளியூர்ல இருக்கீங்க என்றால் ”என்னடா ஊருக்கு போய் ஓட்டு போடணுமா?” என்று அசால்ட்டா விட்டறாதீங்க. இப்பவே அட்வான்ஸ் உங்களுடைய டிக்கெட்டை புக் பண்ணுங்க. இது ஒரு தலைமுறைக்கான ஒரு தேர்தல். உங்களுக்கான தேர்தல். வ்வளவு பெரிய வசதியான வாழ்க்கையா இருந்தாலும் எல்லாத்தையும் உதரி தள்ளிட்டு உங்களுக்காக மட்டுமே வந்திருக்கிறேன்”என்றார்.

Source link