நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக உண்ணாவிரத போராட்டம்
நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக போராட்டம் நடத்தி வரும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.
குருகிராமில் உள்ள மேடந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரை, நேரில் சந்தித்து பேசிய மத்திய அமைச்சர்கள் ஜெ.பி.நட்டா, ஜிதேந்திர சிங் ஆகியோர் ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது உள்ளிட்ட உறுதிகளை அளித்தனர்.
பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்
தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதே மாணவர்களின் முக்கிய கோரிக்கை என சுட்டிக்காட்டியுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நள்ளிரவில் பரிதாபகரமான வீடியோவை வெளியிட்டு மாணவர்களின் கோரிக்கைகளை அவமதிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.
காங்கிரசுக்கு வாங்சுக் மனைவி கண்டனம்
டெல்லியில் பிரதமர் இல்லம் அருகே ராகுல்காந்தி தலைமையில் நடந்த காங்கிரஸ் போராட்டம் நேர்மையற்றது என சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மனைவி கீதாஞ்சலி விமர்சனம் செய்துள்ளார். ஜந்தர் மந்தரில் மாணவர்களுடன் இணைந்து போராட்டம் நடத்தியிருக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.
