திரை தணிக்கை துறை தன்னாட்சி அதிகாரம் பெற்றது. இது, இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால், தன் படம் ரீலீசாகாததற்கு, மத்திய அரசை த.வெ.க.,வினர் குற்றம் சொல்கின்றனர். சிறுபிள்ளைத்தனமான அரசியலை த.வெ.க., தலைவர் விஜய் செய்து வருகிறார். எந்த புரிதலும் இன்றி அவர் இருக்கிறார்.
உதயநிதி தமிழக முதல்வரானால், தி.மு.க., – காங்., கட்சியினர் பார்லிமென்டை நடக்க விடாமல் செய்தல், மைக்கை பிடுங்குதல், பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதாவை கொண்டு வராமல் செய்தல் போன்றவற்றை செய்வர். தற்போது சட்டசபை தேர்தலுக்காக தி.மு.க.,வினர் கோவிலுக்கு செல்கின்றனர். ஆனால், வெளியே வந்தவுடன் நெற்றியில் பூசும் திருநீறை அழித்து விடுகின்றனர்.
இந்த செயல், ஆன்மிகத்தை கொச்சைப்படுத்தும் செயலாகும். இதற்காக, உதயநிதி மீது ஸ்டாலின் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை . உதயநிதி, ஒரு நாளும் தமிழக முதல்வர் ஆக முடியாது.
– பீயூஷ் கோயல்
மத்திய அமைச்சர், பா.ஜ.,
