தமிழ்நாட்டில் சமீபகாலமாக ஜோதிடர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக, அரசியல் சூழலில் ஜோதிடர்கள் சொல்லும் விஷயங்கள் கூர்ந்து கவனிக்கப்படுகின்றன. முதல்வர் விஜய்யும் ஜோதிடத்தில் ஆர்வம் உள்ளவர் என்பதால், அவர் கட்சி தொடங்கியது முதல் அலுவலகம் அமைப்பது வரை அனைத்திலும் ஜோதிடத்தின் தலையீடு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அதுமட்டுமின்றி, விஜய்யின் ஆஸ்தான ஜோதிடரான ரிக்கிரதன் பண்டிட், தொடர்ச்சியாக அரசியல் விவகாரங்கள் குறித்தும், ஜோதிட ரீதியாகக் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் இணையத்தில் பேசி வருகிறார்.
திமுகவிலும் ஆன்மீக வாசம்!
ஆனால், திமுக முழுக்க முழுக்கப் பெரியார் மற்றும் அண்ணாவின் கொள்கைகளைக் கைக்கொண்டு, தீவிர கடவுள் மறுப்பாளர்களாகவும் சமூகநீதிக் கொள்கையாளர்களாகவும் தங்களை முன்னிறுத்தி வருகிறது.
60 ஆண்டுகால அரசியல் வரலாற்றில், திமுக கட்சிக்குள் மத நம்பிக்கைகள் இருந்தாலும், திமுக தலைமை அதை என்றுமே பொதுவெளியில் கூறியதில்லை. ஆனால், கலைஞர் மறைவுக்குப் பிறகு ஸ்டாலினின் எழுச்சி நிகழ்ந்தது.
அதன்பிறகு, அவரின் துணைவியான துர்கா ஸ்டாலின் தொடர்ச்சியாக அரசியல் முடிவுகளில் தலையிட்டதாகச் சொல்லப்பட்டது. இதிலும் குறிப்பாக, 2026 தேர்தலின்போது துர்கா ஸ்டாலினையும் சேர்த்து பேனர்கள் வைக்கப்பட்டன. இது அந்தச் சமயத்தில் பெரிதாகப் பேசப்பட்டது.
கடவுள் நம்பிக்கை இல்லாத ஸ்டாலின்?
ஸ்டாலின் மத நம்பிக்கை அற்றவராக இருந்தாலும், துர்கா ஸ்டாலின் மத நம்பிக்கை கொண்டவர். அவர் கோவில்களுக்குச் சென்று பூஜை செய்வது வழக்கம்தான்.
இந்தச் சூழலில்தான், துர்கா ஸ்டாலினுக்கு நெருங்கிய ஜோதிடர் ஒருவர், உதயநிதியின் ஜாதகக் கட்டம் பலமாக இருப்பதாகவும், இந்தச் சமயத்தில் கட்சியை அவரிடம் கைமாற்றிக் கொடுத்தால் சிறப்பாக அமையும் என்றும் ஆலோசனை வழங்கியிருக்கிறார்.
உதயநிதியிடம் கட்சியை ஒப்படைக்க ஸ்டாலின் தயங்குவது ஏன்?
ஆனால், உண்மையில் கட்சியை உதயநிதியிடம் ஸ்டாலின் ஒப்படைக்க மறுப்பதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே கனிமொழியின் ஆதரவாளர்கள் தனியாகச் செயல்பட்டு வருவதால், தற்போதைய காலகட்டத்தில் உதயநிதியிடம் கட்சியை ஒப்படைப்பதைவிட, கட்சி ஒன்றிணைந்து பலமாக இருப்பதே முக்கியம் என ஸ்டாலின் கருதுகிறார். அதன் பலன்தான் இடைத்தேர்தல். தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் தோல்வி பெற்றிருந்தாலும், எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்து ஒரு நல்ல பெர்ஃபார்மன்ஸை திமுக கொடுத்திருந்தது. உதயநிதிக்குக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் அளவுக்கு இன்னும் அனுபவம் வரவில்லை. அவர் 2017 காலகட்டத்திலேயே தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனாலும், அதற்குள் அவர் துணை முதல்வர் பொறுப்பு வரை வகித்துவிட்டார். இந்தச் சூழலில் கட்சித் தலைமையை அவரிடம் ஒப்படைக்க முடியாது எனவும், மூத்த தலைவர்களின் அறிவுறுத்தலின்படி ஸ்டாலின் செயல்படுவதாகவும் கூறப்படுகிறது. திமுகவின் தோல்விக்கு மிக முக்கியக் காரணங்களில் ஒன்று வாரிசு அரசியல் எனக் கூறப்படுகிறது. விஜய் சென்ற இடங்களில் எல்லாம் இந்த ஒற்றை வார்த்தையை வைத்துத்தான் பிரச்சாரம் செய்தார். இப்படிப்பட்ட சூழலில் கட்சியை உதயநிதியிடம் ஒப்படைப்பது நிச்சயம் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என ஸ்டாலின் கருதுவதாகக் கூறப்படுகிறது.
உதயநிதியிடம் கட்சி?
இந்தச் சூழலில்தான், ஜாதகத்தைக் காட்டி உதயநிதியிடம் கட்சியை ஒப்படைக்க வேண்டும் எனத் துர்கா ஸ்டாலின் வலியுறுத்துவதாகப் பேச்சுகள் எழுந்திருக்கின்றன. ஆனால், இதையெல்லாம் நம்பாத ஸ்டாலின், இந்த ஐடியாவைக் கேட்க மறுப்பதால் திமுக குடும்பத்திற்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாகச் சிலர் தெரிவிக்கின்றனர்.
இவங்க மூணு பேருக்கு சீட்டு கன்ஃபார்ம்…டிக் அடித்த ஸ்டாலின்!
ஏற்கனவே, கட்சிக் கட்டமைப்பில் இளைஞர்களை அதிகளவில் ஈடுபடுத்த வேண்டும் என்ற அறிவுரைகளை ஏற்று, ஸ்டாலின் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வந்தாலும், துர்காவின் அறிவுரையையும் தலைவர் கேட்க வேண்டும் என இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.இந்த விவகாரம் குறித்து நீங்கள் நினைப்பது என்ன?
Source link
