ஸ்டானிஸ்லா: போலந்து ஓபன் பாட்மின்டனில் இந்தியாவின் உன்னதி ஹூடா சாம்பியன் ஆனார்.
போலந்தில் சர்வதேச பாட்மின்டன் தொடர் நடந்தது. பெண்கள் ஒற்றையரில் இந்தியா சார்பில் உன்னதி ஹூடா 18, பங்கேற்றார். இத்தொடரின் ‘நம்பர்-1’ அந்தஸ்து பெற்ற உன்னதி, அரையிறுதியில், ‘நம்பர்-4’ வீராங்கனை, துருக்கியின் பேராக்கை 21-19, 21-16 என்ற நேர் செட்டில் வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறினார்.
இதில் உன்னதி, இத்தொடரின் ‘நம்பர்-2’ வீராங்கனை, உக்ரைனின் போலினா புருரோவாவை எதிர்கொண்டார். இத்தொடரில் முதன் முறையாக முதல் செட்டை இழந்தார் உன்னதி (10-21). பின் சுதாரித்த இவர், அடுத்த இரு செட்டுகளையும் 21-15, 21-8 என கைப்பற்றினார்.
47 நிமிடம் நடந்த பைனலின் முடிவில் உன்னதி, 10-21, 21-15, 21-8 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார்.
