ஜான்விக்கு வந்த மெசேஜ்: மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இரண்டு மகள்களுமே நடிகையாக இருக்கிறார்கள். ஜான்வி கபூரை அடுத்து தங்கை குஷி கபூரும் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இந்நிலையில் அக்காவும், தங்கையும் காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியது குறித்து சினிமா ரசிகர்கள் தற்போது விவாதிக்கிறார்கள்.
உங்களுக்கு யாராவது ஒரு பாலிவுட் நடிகர் flirty மெசேஜ் அனுப்பியது உண்டா என ஜான்வி கபூரிடம் கேட்டார் கரண் ஜோஹர். அதற்கு ஜான்வியோ ஆமாம் என்றார். உன் உடம்பில் உள்ள எல்லா மச்சத்தையும் நான் பார்க்கணும் என பாலிவுட் நடிகர் ஒருவர் மெசேஜ் அனுப்பினார் என்று கூறினார். அதை கேட்டு தங்கை குஷி கபூர் அதிர்ச்சி அடைந்தார்.
நாடே கொண்டாடிய நடிகையின் மகள், பாலிவுட்டில் பெரிய தயாரிப்பாளரான போனி கபூரின் வாரிசு. இது எல்லாம் தெரிந்தும் கூட ஜான்விக்கு அப்படியொரு மெசேஜ் அனுப்பி வைத்த நடிகர் யாராக இருக்கும் என்பதே அனைவரின் கேள்வி ஆகும். அது சரி நம்ம நாட்டாமை சரத்குமார் மகள் தான் என தெரிந்தும் கூட வரலட்சுமியையே பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்திருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது ஸ்ரீதேவி மகளை மட்டும் விட்டுவிடவா போகிறார்கள் என்று சினிமா ரசிகர்கள் பேசுகிறார்கள்.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு: ஸ்ரீதேவியை பெரிய ஸ்டார் ஆக்கிய தமிழ் சினிமாவுக்கு அவரின் மகள்கள் வர வேண்டும் என்பது ரசிகர்களின் ஆசையாக உள்ளது. ஆனால் அந்த ஆசை இதுவரை நிறைவேறவில்லை. அதே காபி வித் கரண் ஷோவில், உன் செல்போன் ஸ்பீட் டயலில் யார் யார் இருக்கிறார்கள் என்று ஜான்வியிடம் கேட்க அவரோ, அப்பா, குஷி, ஷிகு என்றார். தான் காதலிக்கும் ஷிகர் பஹாரியாவை தான் ஷிகு என்று சொல்லியிருக்கிறார். பொது நிகழ்ச்சியில் உளறிவிட்டோமே என்பதை உணர்ந்த ஜான்வி ஒரு ரியாக்ஷன் கொடுக்க அதை பார்த்து குஷியும், கரண் ஜோஹரும் சிரித்தார்கள்.
குஷி காதல்: கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமயத்தில் நடிகர் வேதங் ரெய்னாவை காதலித்து வந்தார் குஷி கபூர். இருவரும் காதலில் சீரியஸாக இருந்தாலும் அது குறித்து வெளியே பேச விரும்பவில்லை. அப்படி பேசினால் கெரியரை விடுத்து காதல் பற்றியே அனைவரும் பேசுவார் என ரகசியமாக வைத்திருக்கிறார்கள் என வேதங் ரெய்னா, குஷிக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள். இந்நிலையில் நீ வேதங் ரைனாவை காதலிக்கிறாயா என கரண் ஜோஹர் கேட்க ரொம்ப தெளிவாக பதில் அளித்தார் குஷி.
ஃபரா கான் இயக்கத்தில் ஷாருக்கான நடித்த ஓம் சாந்தி ஓம் படத்தில் வந்த பிரபலங்கள் ஓமும், நானும் நல்ல நண்பர்கள் என்பார்களே. நாங்களும் அப்படித் தான் என்றார் ஸ்ரீதேவியின் இளைய மகள். ஸ்ரீதேவிக்கு தன் மகள்கள் படித்து அதற்கேற்ப வேலைக்கு செல்ல வேண்டும் என்று தான் ஆசை. ஆனால் ஜான்விக்கும், குஷிக்கும் படிப்பை விட நடிப்பில் தான் ஆர்வமாக இருந்தது. இதையடுத்து மகள்களின் ஆசைக்கு குறுக்கே நிற்காமல் பச்சைக் கொடி காட்டிவிட்டார் ஸ்ரீதேவி.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
பெத்தி சர்ச்சை: ராம் சரணுடன் சேர்ந்து ஜான்வி கபூர் நடித்த பெத்தி படம் பார்த்தவர்கள் முகம் சுளித்தார்கள். இயக்குநர் என்ன ஜான்வியின் முகத்தை காட்டாமல் கழுத்திற்கு கீழேயே காட்டியிருக்கிறார் என்று விமர்சித்தார்கள். தான் சொல்லியும் கேட்காமல் இயக்குநர் புச்சி பாபு சனா அப்படி ஷாட்ஸ் வைத்ததாக ஜான்வி கபூர் ரசிகர் ஒருவருக்கு அனுப்பிய மெசேஜ் கசிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Source link
