உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி: கேரளா முழுவதும் கல்வி நிறுவனங்களுக்கு லீவ் -விவரம் இதோ – football world cup final holiday for educational institutions in kerala tomorrow

உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதிப்போட்டி என்றாலே ஒரு திருவிழா கோலம் ஆரம்பித்து விடும் இந்த முறை அர்ஜென்டினா ஸ்பெயின் மோதும் இறுதி போட்டி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்குகிறது.

உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதிப்போட்டி

இது நாடு முழுவதிலும் உள்ள ரசிகர்களுக்கு தூக்கமே என்பதை இருக்காது. இந்த நிலையில் கால்பந்து விளையாட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் கேரள மாநில அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.என்ன குழந்தைகளே, சந்தோஷம் தானே?என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் என். ஷம்சுதீன் சமூக வலைத்தளங்களில் கேட்டபோதே கேரளா மாணவர்கள் குஷியாகிவிட்டனர். நள்ளிரவில் போட்டி நடப்பதால் மாணவர்கள் டயர்டாக பள்ளிக்கு ஓடிவருவதைத் தவிர்க்க நாளை திங்கட்கிழமை, (ஜூலை 20) அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

திமுக, அதிமுக ஆசை தமிழ்நாட்டில் ஒருபோதும் நிறைவேறாது! தவெக MLA ஆர் எஸ் முருகன் அதிரடி பேட்டி

பள்ளிகள் மட்டுமில்ல.. கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை

அதோடு நிறுத்தாமல் கல்லூரி மாணவர்களுக்கும் ஒரு குட் நியூஸ் வந்துள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சர் ரோஜி எம். ஜான் நம்ம மாணவர்கள் எந்தவித பயணச் சிரமமும் இல்லாமல், முழு உற்சாகத்தோடு உலகக்கோப்பை ஃபைனலை ரசிக்க வேண்டும். அதனால் முதலமைச்சரின் உத்தரவுப்படி திங்கட்கிழமை அன்று அனைத்துக் கல்லூரிகள் மற்றும் புரொபஷனல் காலேஜுகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. மேட்ச்சை நல்லா என்ஜாய் பண்ணுங்க எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னாள் கல்வி அமைச்சர் வி. சிவன்குட்டி மற்றும் பல அரசியல் தலைவர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று விளையாட்டு ஆர்வலர்களான தற்போதைய அமைச்சர்கள் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளனர். இந்த லீவை ஈடுகட்ட பின்னாடி வர்ற ஒரு சனிக்கிழமை வேலை நாளாக மாற்றப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.மேலும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட பொதுத்தேர்வுகள், பல்கலைக்கழகத் தேர்வுகள் எவ்வித மாற்றமும்மின்றி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா: அதிகாலை 3:30 மணி வரை ஹோட்டல்கள் ஓபன்

அதே போல் கர்நாடகா மாநில அரசும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. ரசிகர்கள் எல்லாரும் ஒண்ணா சேர்ந்து, பெரிய ஸ்கிரீனில் லைவ் மேட்ச் பார்த்து கொண்டாட வசதியாக, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தாண்டி அதிகாலை 3:30 மணி வரை ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் திறந்து இருக்க கர்நாடக அரசு சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் பேசும்போது இளைஞர்களின் ஆசையை ஏற்று ஹோட்டல்கள் வழக்கமான நேரத்தைத் தாண்டி திறந்திருக்க அனுமதி அளித்துள்ளோம். அதேநேரம், ஃபுட்பால் ரசிகர்கள் எல்லாரும் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும். யார் ஜெயித்தாலும் பொறுமை இழக்கக் கூடாது. ஆங்காங்கே போலீஸ் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன, அதனால் அமைதியாகப் போட்டியை ரசியுங்கள் என்று அன்புக் கட்டளையும் போட்டுள்ளார்.

வெற்றிக் கொண்டாட்டங்களுக்கான கட்டுப்பாடுகள்

உலகக் கோப்பை இறுதிப் போட்டியை முன்னிட்டு, வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு காவல்துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கோழிக்கோடு நகர ஆணையர் பிறப்பித்த அதிகாரப்பூர்வ உத்தரவில், கொண்டாட்டங்கள் வரம்புகளை மீறக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, அபாயகரமான பைக் பந்தயங்கள், வாகன சாகசங்கள், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பட்டாசுகளை வெடித்தல் மற்றும் பொது அமைதியைக் கெடுக்கும் பிற நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளன.
Source link