புதுடில்லி: பிரபல சமூக வலைதளமான எக்ஸ் பக்கம் இன்று பல நாடுகளில் முடங்கியது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் முன்னணி சமூக வலைதளமான எக்ஸ் தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த தளமானது இன்று (பிப்.16) திடீரென முடங்கியது.
அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் இதனை பயன்படுத்துவோர் இன்று தொழில்நுட்ப கோளாறுகளை எதிர்கொண்டனர். இந்தியாவில் இதனை பயன்படுத்துவோரும் திடீரென சிக்கல்களை சந்தித்தனர்.
பதிவுகளை ஏற்றுவது, பதிவுகளை பார்ப்பது அல்லது பெறுவதில் சிக்கல் நீடித்ததாக பயனர்கள் தெரிவித்து இருக்கின்றனர். வலைதளம் திடீரென செயலிழந்து விட்டதாகவும் அவர்கள் கூறி உள்ளனர்.
மேலும் எக்ஸ் செயலியை பயன்படுத்தும் போது, 53 சதவீதம் பயனர்கள் குறைபாடுகளை எதிர்கொண்டதாகவும், 22 சதவீதம் பேர் தங்களின் பதிவுகளை ஏற்றும் போது பிழைகளை சந்தித்ததாகவும் தெரிவித்து இருக்கின்றனர். பயனர்கள் எக்ஸ் வலைதளத்தை பயன்படுத்த முடியாமல் போனது குறித்த எக்ஸ் தளம் இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ காரணங்களையும் வெளியிடவில்லை.
