உலகளவில் சர்க்கரை விலை சரிவு சப்ளை அதிகரித்தது காரணம்

புதுடில்லி:சர்வதேச சந்தைக்கு பிரேசிலில் இருந்து அதிகஅளவிலான சர்க்கரை வினியோகம் செய்யப்படுவதால் உலகளவில் சர்க்கரையின் விலை குறைந்துள்ளதாக, தர மதிப்பீட்டு நிறுவனமான ‘இக்ரா’ தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:

சர்வதேச அளவில் சர்க்கரை விலை, சந்தையாண்டு 2026ல் மிகவும் குறைந்து காணப்படுகிறது. கச்சா சர்க்கரை விலை ஒரு டன் முந்தைய ஆண்டின் பிப்ரவரியில் 3,600 கோடி ரூபாயாக இருந்தது.இந்தாண்டு பிப்ரவரியில் 2,600 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

இதேபோல, வெள்ளை சர்க்கரையின் விலை ஒரு டன் முந்தைய ஆண்டில் 49,231 ரூபாயிலிருந்து பிப்ரவரியில் 37,756 ரூபாயாக குறைந்துள்ளது.

பிரீமியம் சர்க்கரையின் விலை ஒரு டன் முந்தைய ஆண்டின் 8,051 ரூபாயை விட கடந்த பிப்ரவரியில் 8,791 ரூபாயாக அதிகரித்துள்ளது.

சந்தையாண்டு 2025 மற்றும் 2026ல், சர்வதேச சர்க்கரை உற்பத்தி 1893 லட்சம் டன்னாக அதிகரிக்கும். அதாவது, கடந்த ஆண்டை விட 5 சதவீதம் அதிகமாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

 சர்வதேச சர்க்கரை பயன்பாடு 1,781 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என கணிப்பு

 நம் நாட்டில் சந்தையாண்டு 2026ல், 324 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி எதிர்பார்க்கப்படுகிறது.

Source link