உலகின் 'டாப் 50' பல்கலையில் இந்திய கல்வி நிறுவனங்கள்

புதுடில்லி: பிரிட்டனைச் சேர்ந்த, ‘குவாக்கரெலி சைமன்ட்ஸ்’ நிறுவனம் வெளியிட்டுள்ள 16வது ஆண்டுக் கான பாடவாரியான உலக பல்கலை தரவரிசை யில், நம் நாட்டின் சென்னை உட்பட நான்கு ஐ.ஐ.டி.,கள், ஜவஹர்லால் நேரு பல்கலை மற்றும் பிட்ஸ் பிலானி கல்வி நிறுவனங்கள் உலகின் முதல் 50 இடங்களில் இடம்பெற்றுள்ளன.

உலகளவில் பல்கலைகளின் கல்வித் தரத்தை, ‘குவாக்கரெலி சைமன்ட்ஸ்’ என்ற பிரிட்டன் நிறுவனம் மதிப்பிடுகிறது. பாடவாரியான தரவரிசையின் 16வது ஆண்டு பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில், 100க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள 1,900 பல்கலைகளில், நடைமுறையில் உள்ள 21,000க்கும் அதிகமான பாட திட்டங்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.

இது, பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், உயிரியல் மற்றும் மருத்துவம், கலை மற்றும் மனிதவியல் உள்ளிட்ட ஐந்து முக்கிய துறைகளை அடிப்படையாக கொண்டது.

நம் நாட்டைச் சேர்ந்த 12 பல்கலையின், 27 பாடங்கள் இந்த ஆண்டுக்கான தரவரிசையில் இடம்பெற்றுள்ளன. இவை, தரவரிசையில் முதல் 50 இடங்களில் வந்துள்ளன. கடந்த ஆண்டு 12 பாடங்கள் மட்டுமே இந்த தரவரிசையில் இடம்பெற்றிருந்தது. ஐ.ஐ.எம்., ஆமதாபாத், மேலாண்மை மற்றும் மார்க்கெட்டிங் துறைகளில் 21வது இடத்தைப் பிடித்துள்ளது. ஐ.ஐ.டி., டில்லி ஆறு பாடங்களில் டாப் 50 இடங்களைப் பெற்றுள்ளது.

மேலும் சென்னை, கரக்பூர் மற்றும் மும்பை ஐ.ஐ.டி.,கள், ஜவஹர்லால் நேரு பல்கலை மற்றும் பிட்ஸ் பிலானி ஆகிய கல்வி நிறுவனங்களின் பாடமும் உலகின் முதல் 50 இடங்களில் இடம்பெற்றுள்ளன.

Source link