2026 ஆம் ஆண்டிற்கான தேசிய வர்த்தக மதிப்பீட்டு அறிக்கையை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் அதிகப்படியான இறக்குமதி வரிகள் மற்றும் வர்த்தக தடைகளும் இருப்பதாக, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிக முக்கிய பொருளாதார நாடுகளில் இந்தியாவில் தான் அதிகப்படியான இறக்குமதி வரிகள் இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, வேளாண் பொருட்களுக்கு 113 சதவீத வரிகள் விதிக்கப்படுகிறது. அதே போல, மதுபானங்களுக்கு 150 சதவீதம் வரையிலான வரிகள் விதிக்கப்படுகின்றன. அதோடு, காபி மற்றும் உலர் திராட்சை போன்றவற்றிற்கு 100 சதவீத வரிகள் விதிக்கப்படுகின்றன. ஆப்பிள் மற்றும் சைக்கிள் போனவற்றிற்கு 50 சதவீத வரிகள் விதிக்கப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் விநியோகத்தை மேற்கொள்ளக் கூடாது என அமெரிக்க அரசு, இந்திய அரசிற்கு எச்சரிக்கை விடுத்தது. அதோடு, இந்தியா மீதான வரியையும் உயர்த்தியது. அதே நேரத்தில், அமெரிக்கா எண்ணெய்யை வாங்க மறுத்து ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வர்த்தகத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தால், வரியை 500 சதவீதம் வரை உயர்த்துவோம் எனவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்திய அரசிற்கு எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
