வாழ சிறந்த நகரங்கள் பட்டியல்
ஒரு நகரத்தில் கட்டமைப்பு, பொருளாதார வளர்ச்சி, சுகாதார வளர்ச்சி, சுத்தமான சுற்றுச்சூழல் ,மற்றும் தடையற்ற போக்குவரத்து ,கல்வி, மின்சாரம் ,குடிநீர் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டு வாழ சிறந்த நகரங்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் உலக அளவில் இந்திய நகரங்களும் இடம் பெற்றுள்ளது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.பிரபல சர்வதேச சுற்றுலா இதழான Time Out, 2026-ஆம் ஆண்டிற்கான “உலகின் மகிழ்ச்சியான நகரங்கள்” (World’s Happiest Cities) பட்டியலை வெளியிட்டுள்ளது. குறிப்பாக உலகில் உள்ள 173 முக்கிய நகரங்களில் இந்த ஆய்வு மேற்க்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் உலகின் சிறந்த 20 நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தத் தரவரிசை எப்படி கணக்கிடப்பட்டது?
உலகம் முழுவதிலும் உள்ள சுமார் 24,000 மக்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. வெறும் உணவு, பொழுதுபோக்கு மட்டுமல்லாமல்,நகர மக்களின் நேர்மறையான எண்ணங்கள்,
அங்கு வாழும் மக்களின் பிணைப்பு மற்றும் நட்பு,
அன்றாட வாழ்க்கையில் அவர்களுக்குக் கிடைக்கும் மகிழ்ச்சி,
மற்ற நகரங்களை விட இந்த நகரம் அவர்களுக்கு அளிக்கும் மனநிறைவு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர் ஏன் இவ்வளவு சிறப்பு?
ராஜஸ்தானின் தலைநகரான ‘பிங்க் சிட்டி’ எனப்படும் ஜெய்ப்பூர், எப்போதும் வெளிநாட்டு மற்றும் உள்ளூர் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் ஒரு இடம். ஆனால் அங்கு வாழும் மக்களுக்கும் அது ஒரு சிறந்த சூழலைத் தருகிறது.அளவுக்கு அதிகமான நெரிசல் இல்லாத அமைதியான வாழ்க்கை முறை, அழகான பூங்காக்கள், காலையில் கோட்டைகளையும் அரண்மனைகளையும் சுற்றிப்பார்ப்பது, மாலையில் பாபு பஜார், ஜோஹரி பஜார் போன்ற வண்ணமயமான சந்தைகளில் ஷாப்பிங் செய்வது என ஜெய்ப்பூர் எப்போதும் ஒரு தனித்துவமான அனுபவத்தைத் தருகிறது. வெங்காய கச்சோரி முதல் லால் மாஸ் வரை அங்குள்ள சுவையான உணவுகளும் மக்களின் மகிழ்ச்சிக்கு ஒரு முக்கிய காரணம்.
பட்டியலில் முதலிடம் பிடித்த நகரங்கள்
இந்த ஆண்டின் பட்டியலில் முதலிடத்தை பிரிட்டனின் பாத் (Bath) நகரம் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து பனாமா சிட்டி (2-வது இடம்), மெக்சிகோவின் குவாடலஹாரா (3-வது இடம்), கொலம்பியாவின் மெடலின் (4-வது இடம்) மற்றும் போலந்தின் கிராகோவ் (5-வது இடம்) ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.இந்தியாவிலிருந்து டெல்லி, மும்பை போன்ற மெட்ரோ நகரங்களைத் தாண்டி, வரலாற்றுச் சிறப்புமிக்க ஜெய்ப்பூர் உலகின் மகிழ்ச்சியான நகரங்களில் 6-வது இடத்தை பிடித்துள்ளது இந்தியர்களுக்குப் பெருமை சேர்க்கும் விஷயமாக அமைந்துள்ளது.
இந்திய நகரங்களின் நிலை என்ன?
பொருளாதார ரீதியாக இந்தியா வேகமாக வளர்ந்து வந்தாலும், வாழத் தகுதியான சூழல் என்று வரும்போது நமது நகரங்கள் பின்தங்கியே நிற்கின்றன.
டெல்லி – 120-வது இடம் மும்பை – 121-வது இடம் சென்னை – 123-வது இடம் பெங்களூரு – 127-வது இடம் பிடித்துள்ளது. நமது சென்னை உள்ளிட்ட மற்ற முக்கிய இந்திய நகரங்களும் தங்களின் உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளைச் சரிசெய்தால், வருங்காலத்தில் உலகளவில் வாழச் சிறந்த நகரங்களின் பட்டியலில் நிச்சயம் முன்னிலை பெற முடியும்.
Source link
