உலக ஹாக்கி: இந்தியா 2வது இடம்: பைனலில் இங்கிலாந்திடம் வீழ்ந்தது

ஐதராபாத்: உலக கோப்பை ஹாக்கி தகுதி சுற்று பைனலில் ஏமாற்றிய இந்திய அணி 0-2 என, இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது.

பெல்ஜியம், நெதர்லாந்தில், வரும் ஆக. 14-30ல் பெண்களுக்கான உலக கோப்பை ஹாக்கி 16வது சீசன் நடக்கவுள்ளது. இதற்கான தகுதிச் சுற்று, ஐதராபாத்தில் நடந்தது. பைனலில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. ஏற்கனவே இரு அணிகளும் உலக கோப்பைக்கான இடத்தை உறுதி செய்தன.

ஆட்டத்தின் 13வது நிமிடத்தில் இங்கிலாந்துக்கு கிடைத்த ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்பில் கிரேஸ் பால்ஸ்டன் ஒரு கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் இந்திய அணி 0-1 என பின்தங்கி இருந்தது. பின், 43வது நிமிடத்தில் இங்கிலாந்தின் நீல் எலிசபெத், ஒரு ‘பீல்டு’ கோல் அடித்தார். கடைசி நிமிடம் வரை போராடிய இந்திய வீராங்கனைகளால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

ஆட்டநேர முடிவில் இந்திய அணி 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தது. இங்கிலாந்து முதலிடத்தை தட்டிச் சென்றது.

ஸ்காட்லாந்து வெற்றி

மூன்றாவது இடத்துக்கான போட்டியில் ஸ்காட்லாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் இத்தாலி அணியை வீழ்த்தியது. மூன்றாவது இடம் பிடித்த ஸ்காட்லாந்து, உலக கோப்பையில் விளையாட தகுதி பெற்றது.

Source link