'உளவாளிகளா நாங்கள்' * செஸ் தொடரில் அமெரிக்க வீரர் எதிர்ப்பு

பாப்ஹாஸ்: சைப்ரஸ் தீவில் ‘கேண்டிடேட்ஸ்’ செஸ் தொடர் (ஆண்கள், பெண்கள்) நடக்கிறது. ஆண்கள் பிரிவில் இந்தியாவின் பிரக்ஞானந்தா 20, உட்பட 8 பேர் பங்கேற்கின்றனர். பெண்கள் பிரிவில் உலக கோப்பை வென்ற இந்தியாவின் திவ்யா 20, வைஷாலி 24, உட்பட 8 பேர் பங்கேற்கின்றனர்.

இதில் வீரர், வீராங்கனைகள் ஏமாற்றுவதை தடுக்கும் வகையில், போட்டி நேரத்தில் அவர்களைச் சுற்றி ‘ஸ்கேனர்கள்’ உட்பட பல்வேறு கண்காணிப்பு கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.

இதற்கு, இத்தொடரில் பங்கேற்கும் உலகின் ‘நம்பர்-2’ வீரர், அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியது:

போட்டி துவங்கும் முன், பின் முழுமையாக சோதனை செய்கின்றனர். ‘மெட்டல் டிடெக்டர்கள்’, ‘ஸ்கேனர்கள்’ என கண்காணிப்பு கருவிகள், அரங்கில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதையெல்லாம் பார்க்கும் போது, நாங்கள், ஈரானுக்குள் இருக்கும் மொசாத் உளவாளிகள் போலத் தோன்றுகிறது.

இது முட்டாள்தனமான செயல். உலகத் தரத்திலான வீரர், வீராங்கனைகள், இத்தனை நடுவர்கள் இருக்கும் போது, மோசடி செய்ய முடியுமா. இந்த யதார்த்தத்தை சர்வதேச செஸ் கூட்டமைப்பு (‘பிடே’) புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link