டியான்ஜின்: உலக உஷு தொடரில் இந்தியாவுக்கு 3 தங்கம் உட்பட 9 பதக்கம் கிடைத்தது.
சீனாவில், உலக ஜூனியர் உஷு சாம்பியன்ஷிப் 10வது சீசன் நடந்தது. ஆண்களுக்கான ‘சாண்டா’ பிரிவில் இந்தியாவின் உபேந்திரோ (45 கிலோ), பாம்ஹெய்பா (ஜூனியர் 52 கிலோ), விக்டர் (‘யூத்’ 52 கிலோ) தங்கம் வென்றனர். மற்றொரு இந்திய வீரர் யுவராஜ் (‘யூத்’ 48 கிலோ) வெள்ளி வென்றார்.
‘தாவ்லு’ பிரிவில் இந்தியாவின் ராஜ்குமாரி சானு வெண்கலம் வென்றார். மற்றெரு இந்திய வீராங்கனை தேவிகாராணி தேவி, ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் கைப்பற்றினார்.
இத்தொடரில் இந்தியாவுக்கு 3 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என, முதன்முறையாக 9 பதக்கம் கிடைத்தது.
