உ த்திரமேரூர் மற்றும் மயிலாடுதுறையில், சுயேச்சை வேட்பாளர்களுக்கு, ராமதாஸ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

உ த்திரமேரூர் மற்றும் மயிலாடுதுறையில், சுயேச்சை வேட்பாளர்களுக்கு, ராமதாஸ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

சசிகலாவின் அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியுடன், கூட்டணி வைத்துள்ள பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம் என்ற பெயரில், 35 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். அவர்களுக்கு சிலிண்டர், தர்ப்பூசணி, பச்சை மிளகாய், கிரிக்கெட் பேட், குக்கர், பேபி வாக்கர் ஆகிய சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அன்புமணி பா.ம.க., போட்டியிடும் 18 தொகுதிகளில், 11 தொகுதிகளில் ராமதாஸ் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தார். ஆனால், பா.ம.க., செய்தித் தொடர்பாளர் பாலு போட்டியிடும் திருப்போரூரில், ராமதாஸ் தரப்பு வேட்பாளர் பொற்செழியன், தனது வேட்புமனுவை திரும்ப பெற்றார். உத்திரமேரூர், மயிலாடுதுறை தொகுதிகளில், ராமதாஸ் வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, உத்திரமேரூர் தொகுதியில், கப்பல் சின்னத்தில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் மகேஸ்வரி; மயிலாடுதுறையில் ஏழு கதிர் கொண்ட பேனா முனை சின்னத்தில் போட்டியிடும், சுயேச்சை வேட்பாளர் சம்பத் ஆகியோருக்கு, ராமதாஸ் ஆதரவு தெரிவித்துள்ளார். இவர்களுக்கு ஓட்டு போடுமாறு கட்சியினருக்கு, அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Source link