நமது நிருபர்
ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் ஊடுருவல் முயற்சியை முறியடித்த ராணுவம் பாகிஸ்தான் பயங்கரவாதியை சுட்டுக் கொன்றது.
ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் உரி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் வந்தது. அப்பகுதியில் இந்திய ராணுவமும், ஜம்மு காஷ்மீர் போலீசாரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பயங்கரவாதி ஒருவன் ஊடுருவ முயற்சித்துள்ளான்.
இதையடுத்து பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். அவன் பாகிஸ்தானை சேர்ந்தவன் என்று அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது.
என்கவுன்டர் நடந்த இடத்திலிருந்து ஏகே ரைபிள், பிஸ்டல்கள் மற்றும் ஏராளமான வெடிமருந்துகள் உள்ளிட்டவற்றை பாதுகாப்புப் படையினர் மீட்டனர். அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை இன்னும் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
