ஊட்டி: ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவி ஒருவருக்கு தேர்வில் உதவுவதாக கூறி பாலியல் தொல்லை

ஊட்டி: ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவி ஒருவருக்கு தேர்வில் உதவுவதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவக் கல்லூரி டாக்டர் ஓம் பிரகாஷை போலீசார் கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு டாக்டராக பணியாற்றும் ஓம் பிரகாஷ் என்பவர், மாணவி ஒருவருக்கு தேர்வில் உதவுவதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இது குறித்து அந்த மாணவி பெற்றோரிடம் தகவல் தெரிவித்தார். இதனால், ஆத்திரமடைந்த பெற்றோர் ஊட்டி மத்திய போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தனர். விசாரணையில், மாணவியிடம் டாக்டர் அத்துமீறியது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் ஓம் பிரகாஷை சிறையில் அடைத்தனர்.

Source link