துாத்துக்குடி: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, நேற்று அளித்த பேட்டி:
தேசிய ஜனநாயக கூட்டணியில் எவ்வித பிரச்னையும் இல்லை. அ.தி.மு.க., தலைமையில் தான் தமிழகத்தில் ஆட்சி அமையும் என, மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் தொடர்ந்து சொல்லி வருகிறார்.
தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும் என்பதே அ.தி.மு.க.,வின் கொள்கை. சகோதரர் விஜய் கட்சி துவங்கியது முதல், எங்கள் கொள்கையையே முழங்கி வருகிறார்.
அரசியல் எதிரி தி.மு.க., தான் என்று, அனைத்து பிரசாரக் கூட்டங்களிலும் பேசி வருகிறார். தி.மு.க.,வை வீழ்த்த, ஒத்த கருத்துள்ள அனைவரும் ஒன்றாக கைகோர்க்க வேண்டும். அந்த வகையில், தே.ஜ., கூட்டணியில் விஜயும் இணைந்தால் நன்றாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
