தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு த.வெ.க.வில், அதிமுக, திமுக என மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வேட்பாளர்களாக அறிவித்துள்ளனர். வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட பிறகு இதில் பலரது குற்றப்பின்னனிகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இதனால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
அதே போல, தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தொகுதிக்குக் கடந்த வாரம் பா.ஜ.க.வில் இருந்து த.வெ.க.வுக்கு வந்த குறிச்சி காண்டியப்பன் (எ) சந்திரகாண்டீபனை வேட்பாளராக அறிவித்தார் த.வெ.க தலைவர் ஜோஜப் விஜய். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சந்திர காண்டீபன் பல வழக்குகளில் சிக்கியவர் என்று சமூகவலைத்தளங்களில் பரவி செய்தி சேனல்களிலும் பரபரப்பானதது. இந்த நிலையில் பேராவூரணி தொகுதி த.வெ.க தொண்டர்கள் வேட்பாளர் இதுவரை எங்களைப் பார்க்கக் கூட வரவில்லை. எல்லா தொகுதியிலும் தேர்தல் வேலை தொடங்கிப் பரபரப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது.
நாளை எல்லாரும் வேட்பு மனுத் தாக்கல் செய்யப் போகிறார்கள். ஆனால் எங்கள் பேராவூரணி தொகுதி வேட்பாளர் சந்திர காண்டீபனை மட்டும் இன்னும் தொகுதிப் பக்கமே காணோம். நிர்வாகிகளைக் கூட சந்திக்கவில்லை. வேட்பாளர் மாற்றம் இருக்கும் என்கிறார்கள் கட்சித் தலைமை எப்போது வேட்பாளரை மாற்றி அறிவிக்குமோ தெரியவில்லை. சந்திர காண்டீபன் பற்றி மாவட்டத் தலைவர் மதனுக்கு நல்லாவே தெரிந்தும் கூட அவர் உண்மையை மறைத்து கட்சியில் சேர்த்து சீட்டும் கிடைக்க வைத்திருக்கிறார் என்கின்றனர். பேராவூரணி தொகுதிக்கு மாற்று வேட்பாளரை அ.தி.மு.க.வில் இருந்து தேடிக் கொண்டிருக்கிறது த.வெ.க தலைமை.
