எட்டு மாதங்களாக அடக்கம் செய்யப்படாத முன்னாள் அதிபரின் உடல்

லுசாகா: தெற்கு ஆப்ரிக்க நாடான ஜாம்பியாவின் முன்னாள் அதிபர் எட்கர் லுங்கு மற்றும் தற்போதைய அதிபர் ஹக்கைண்டே ஹிச்சிலேமாவுக்கும் இடையே கடும் பகை நிலவி வந்தது.

இந்நிலையில், லுங்கு கடந்தாண்டு ஜூன் 5ம் தேதி தென்னாப்ரிக்காவில் மரணமடைந்தார். ஆனால், அவரது உடல் 8 மாதங்களாகியும் அடக்கம் செய்யப்படாமல் அந்நாட்டில் உள்ள சவக்கிடங்கிலேயே வை க்கப்பட்டுள்ளது.

முன்னாள் அதிபர் லுங்கு, தான் இறந்த பின் தற்போதைய அதிபர் ஹிச்சிலேமா தன் உடலுக்கு அருகில் வரக்கூடாது என, தன் குடும்பத்தினரிடம் வாக்குறுதி வாங்கியதுதான் இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

தற்போதைய அதிபர் தலைமையிலான அரசு, லுங்குவின் உடலை தாயகம் கொண்டு வந்து அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய விரும்புகிறது. ஆனால், லுங்குவின் இறுதி விருப்பத்தின் காரணமாக அதை நடத்த அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இ தையடுத்து இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கு சென்றது. ஒரு முன்னாள் அதிபரின் உடல் அரசுக்கு சொந்தமானது. அவரது தனிப்பட்ட விருப்பத்தை விட நாட்டின் மரபுகளே முக்கியம் என கூறி, உடலை ஜாம்பியா அரசிடம் ஒப்படைக்க தென்னாப்ரிக்க நீ திமன்றம் உத்தர விட்டது. இதை எதிர்த்து லுங்குவின் குடும்பத்தினர் மேல்முறையீடு செய்துள்ளதால், சட்ட சிக் கல்கள் நீடிக்கின்றன.

Source link