‘எனக்கும் தயாரிப்பாளருக்கும் சண்டைனு போடுறாங்க!” – ‘கருப்பு’ பட அப்டேட் தந்த ஆர்.ஜே. பாலாஜி |’They’re starting a fight between me and the producer!’ – RJ Balaji gives an update on ‘Karuppu’

சூர்யா, த்ரிஷா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கியிருக்கும் “கருப்பு’ படத்தின் ரிலீஸுக்காகத்தான் சூர்யா ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

ஆர்.ஜே.பாலாஜி எங்கு சென்றாலும், அவரை கருப்பு படத்தின் அப்டேட் தொடர்பான கேள்வியும் பின்தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.

‘கருப்பு’ படத்தின் முதற்கட்டப் பணி, படப்பிடிப்பு, இறுதிக்கட்டப் பணி என இயக்குநர் ஆர்.ஜே.பி பிஸியாக இருந்ததனால் சமீப நாள்களாக கிரிக்கெட் வர்ணனையில் பெரிய அளவில் பங்கேற்கவில்லை.

சூர்யா - கருப்பு திரைப்படம்

சூர்யா – கருப்பு திரைப்படம்

பிறகு, டி20 உலகக் கோப்பை போட்டிக்காக மீண்டும் கமென்டரி பக்கம் வந்திருந்தார். நேற்றைய இறுதிப் போட்டியின் வர்ணனைப் பணிகளை முடித்துவிட்டு இன்று காலை சென்னை திரும்பியிருக்கிறார். தற்போது ‘கருப்பு’ திரைப்படம் தொடர்பாகப் பேசி ஒரு காணொளியையும் வெளியிட்டிருக்கிறார்.

Source link