என்டிஏ ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும் தயங்காது: திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

இவரின் ஓனரான பாஜகவின் ஒரே நோக்கம் தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுப்பதுதான். நேராக வந்தால் தமிழக மக்கள் நோட்டாவிற்கு கீழே அனுப்பிவிடுவார்கள். அதனால் அதிமுக முகமூடியுடன் வருகிறார்கள்.

பாஜக 12 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தாலும், தமிழகத்துக்கு ஒரு சிறப்புத் திட்டம் கூட இல்லை. ஆனால் தேர்தல் வந்துவிட்டது என்று, தமிழ்நாட்டிற்குக் கிளம்பி வருகிறார் பிரதமர் மோடி. கடந்த மாதம் திருச்சிக்கு வந்த மோடி, மத்திய பாஜக அரசு தமிழகத்துக்கு செய்த திட்டங்கள் பற்றி எதுவும் சொன்னாரா? இருந்தால்தானே சொல்ல முடியும். இதில், திமுக எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிட்டுச் செல்கிறார்.

பிரதமர் மோடி தமிழத்தில் ஒருவாரம் தங்கியிருந்து, தலைசிறந்த தமிழ்நாடாக இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் முன்னேற்றமும் வளர்ச்சியும் தொடர வேண்டும் என்றால், 7வது முறையும் திமுக ஆட்சி அமைய வேண்டும், பாஜகவும் அதன் கொத்தடிமைக் கூட்டமும் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால், உத்தரபிரதேசம், மணிப்பூர் போன்று வன்முறைக் காடாக ஆகிவிடும். இவர்கள் வந்தால் தமிழ்நாட்டின் பெயரையே தட்சிண பிரதேஷ் என்று மாற்றவும் தயங்க மாட்டார்கள்.

இதைத் தடுக்க வேண்டும் என்றால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் பாஜக – அதிமுக கூட்டணிக்கு எதிராக, ஓரணியில் இணைய வேண்டும். நம்முடைய எதிரிகளையும், பாஜகவின் உதிரிகளையும் வீழ்த்த வேண்டும். நாம் போராடுவது, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றிக்காக மட்டுமல்ல, தமிழ்நாட்டின் வெற்றிக்காக. பாஜகவின் டப்பா இன்ஜின் முன்னால், நம்முடைய திராவிட மாடலின் சூப்பர் ஃபாஸ்ட் எஞ்சின் ஒருபோதும் தலைகுனியாது. நம்முடைய ஸ்பீடு என்ன என்று காண்பிப்போம்.

இந்த ஜனநாயகப் போரில், அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, தமிழ்நாட்டைக் காக்க, அனைவரும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Source link