“என்னுடைய கனவு இது!” – கார்த்திக் சுப்புராஜ் |”This is my dream!” – Karthik Subbaraj

இந்த நிகழ்வில் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், “படம் டைரக்ட் பண்ணனும்ங்கிற கனவுலதான் இங்க வந்தேன். அதன் பிறகு ஸ்டோன் பென்ச் நிறுவனம் மூலமா படங்களைத் தயாரிக்கணும்னு ஆசைப்பட்டேன்.

எங்களுடைய தயாரிப்புல வர்ற படங்கள்ல, கார்த்திக் சுப்புராஜ் வழங்கும்ங்கிற கார்டு போட்டிருப்போம். தயாரிப்பாளர்ல கார்த்திகேயன் சந்தனாம் பெயர் இருக்கும். ஆனா, இந்தப் படத்துல தயாரிப்பாளர்ல என்னுடைய பெயரையும் போடுங்கனு நான் கேட்டேன். என்னுடைய கனவு இது.

எனக்கு ஈழம் பற்றிய விஷயங்கள்ல ஒரு நெருக்கம் இருக்கு. ‘காட்சிப்பிழை’ என்கிற குறும்படம் மூலமாகத்தான் நான் ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியில செலக்ட் ஆனேன். அந்தக் குறும்படம் ஈழப் போர் பற்றியதுதான்.

போர் எப்படியான மனநிலையை உருவாக்கும்ங்கிறதை எனக்கு கடத்திய படம் ‘தி பியானிஸ்ட்’. அதுபோல ஒரு படம் பண்ணனும்னு எனக்கு ஆசை இருந்தது.

கலை என்பது வெறும் கருவி மட்டும் கிடையாது, நாம் பார்த்திடாத கதைகளைச் சொல்வதற்கான களம் அது.

ஈழ இயக்குநரின், ஈழம் தொடர்பான படத்தை மெயின்ஸ்ட்ரீம் சினிமாவில சொல்லணும்ங்கிறது என்னுடைய கனவு. இப்போ இருக்கிற போர்ச் சூழலிலும் இந்த ‘நீளிரா’ படத்தைப் பொருத்திப் பார்க்கலாம்” என்றார்.

Source link