என் ரோஜா நீயா: “மணி ரத்னம் சார் அனுப்பிய ஸ்மைலி எமோஜி!”- மதன் கார்க்கி | வரித்துணையே 10 |en roja neeya madhan karky mani ratnam tribute song

மதன் கார்க்கியிடம் பேசுகையில், “என்னிடம் ‘குஷி’ படத்தின் இயக்குநர் அப்பாடலுக்கான சூழலைச் சொல்லும்போதே, காஷ்மீரில் மணி ரத்னம் ரசிகராக இருக்கும் நாயகனுக்கு காதல் வருகிறது என்பதைத் தான் என்னிடம் சொன்னார். ‘ரோஜா’ படத்தின் தீம்தான் அதுவும்!

இந்தப் பாடலின் தெலுங்கு வெர்ஷனை இயக்குநரே எழுதியிருந்தார். தமிழில் இந்தப் பாடலை நான் எழுதும்போது, மணி ரத்னம் சார் படத்தின் டைட்டில்களைக் கோத்து எழுதினேன். பாடல் வெளிவந்ததும், மணி ரத்னம் சாருக்கு, ‘உங்களின் ரசிகராக காஷ்மீரில் இருக்கும் நாயகனுக்கு நாயகி மீது காதல் ஏற்படுகிறது’ என்ற சூழலை இயக்குநர் சொன்னார்.

அதற்கேற்றபடி நான் இந்தப் பாடலை எழுதியிருக்கிறேன்’ என மெசேஜுடன் இந்தப் பாடலையும் அனுப்பினேன். அவர் அழகாக ஒரு ஸ்மைலி எமோஜியை மட்டும் அனுப்பினார். அந்த ஸ்மைலியைதான் இந்தப் பாடலுக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டாகவும் நான் கருதுகிறேன்.” என லேசாக புன்னகை தந்தவர்,

“அப்பா இந்தப் பாடலைக் கேட்ட பிறகு, அவருக்கு குறிப்பிட்ட ஒரு வரி மிகவும் பிடித்திருந்ததாகச் சொன்னார். நான் எழுதிய பாடல்களில் மொத்தமாக 6 பாடல்களுக்கு மட்டுமே அப்பா பாராட்டியிருக்கிறார்.

Source link