2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி , புதுச்சேரியில் பரப்புரை மேற்கொண்டிருந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்.
மத்திய அரசுக்கென்று வருவாய்க்கு எதுவும் இல்லை, மாநில அரசுகள் கொடுக்கும் வரிதான் மத்திய அரசுக்கு இருக்கும் வருமானம். மத்திய அரசு வட்டிக்கடை வைத்துள்ளதா? கந்து வட்டி வாங்குகிறதா? வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் நடைபெற்றது போல் வரிகொடா இயக்கம் இப்போது நடத்த முடியுமா?
நான் சீப் மினிஸ்டர் ஆஃப் தமிழ்நாடு (முதல்வர்), அப்படி வந்துவிட்டேன் என்றால் என்னிடம் வரி வாங்கிவிட முடியுமா? முடியாது. இப்போதைக்கு ஆட்சியில் இருப்பவர்கள் எல்லாம் ஊழல்வாதிகள் அதனால் ஈடி(அமலாக்கத்துறை), இன்கம்டேக்ஸ் ரெய்டுகள் வருகிறது, அதற்கு பயந்து மத்திய அரசுக்கு வரி கட்டுகின்றனர். என்னிடம் வரி வாங்க முடியாது.
என் வீட்டிற்கு இதுவரை ஈடி , இன்கம்டேக்ஸ் ரெய்டுகள் வந்ததே இல்லை. அவர்கள் ஏன் வரவில்லை ? என்னிடம் எதுவும் இல்லை. அதனால் , வரவில்லை! இப்போது தெரிகிறதா? ஒரு நேர்மையாளனுக்கு மட்டுமே துணிவும் வீரமும் இருக்கும் என்று கூறியுள்ளார்.
