சட்டப்பேரவையில் முதல்வர் விஜய், 110 விதியின் கீழ் எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, தற்போது அமைச்சர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், அரசு தலைமைக் கொறடா மற்றும் பிற சட்டமன்ற உறுப்பினர்களுக்கான வாகனங்களைக் கொள்முதல் செய்வதற்கான விதிமுறைகள் அரசிதழில் வெளியாகியுள்ளன.
ரூ.26 லட்சம் நிர்ணயம்
அமைச்சர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அரசு தலைமைக் கொறடா ஆகியோருக்கு கார் வாங்குவதற்காக ஒவ்வொருவருக்கும் அதிகபட்சமாக ரூ.26 லட்சத்தைத் தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. இதன்படி, மொத்தம் 40 கார்களுக்கு ரூ.10.40 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல, மற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் கார் வாங்குவதற்காக ரூ.15 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 194 கார்களுக்கு ரூ.29.10 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆக மொத்தம், 234 கார்களுக்கு ரூ.39.50 கோடி செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதன் மூலம், சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கார்கள் வாங்குவதற்காகச் சுமார் ரூ.40 கோடி செலவிடப்பட உள்ளது.
