எம்.சிவசக்திவேல், 20கல்லுாரி மாணவர், சேடப்பட்டி, திண்டுக்கல் முதல்முறையாக ஓட்டு போட உள்ளேன். முன்னாள் முதல்வர்

எம்.சிவசக்திவேல், 20

கல்லுாரி மாணவர், சேடப்பட்டி, திண்டுக்கல்

முதல்முறையாக ஓட்டு போட உள்ளேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பிடிக்கும். அவர் மறைவுக்கு பின் தமிழகத்தில் ஆட்சி தடுமாறியதாக தான் உணர்கிறேன். இப்போது இருக்கும் தி.மு.க., ஆட்சி பரவாயில்லை. ஆனால், ஆட்சி முடியும் கடைசி நேரத்தில், 5,000 ரூபாய் உரிமை தொகை, அரசு ஊழியர்களுக்கு அறிவிப்பு என, எண்ணற்ற வேடிக்கைகள் அரங்கேறின. அதில் மக்கள் மீதான உண்மையான அக்கறை தெரியவில்லை.

தேர்தல் ஆதாயம்தான் தெரிந்தது. புதுவரவான த.வெ.க.,வும் இந்த தேர்தலில் இலவச அறிவிப்புகள் வெளியிட்டுள்ளது. அதில் எனக்கு விருப்பமில்லை. நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பின்பே, அரசியலைப் பற்றி நாம் கவலை கொள்ள வேண்டியது அவசியம் என்பதை புரிந்து கொண்டேன்.

மாநிலத்தில் இரு திராவிட கட்சிகள் வாயிலாக, மக்கள் அடைந்த முன்னேற்றம், நன்மை, தீமை, சட்டம் – ஒழுங்கு எல்லாம் சீர்துாக்கி பார்க்கும்போது நிச்சயம் மாற்றம் வேண்டும். அந்த வகையில் ஒட்டுமொத்த இளைஞர்களை அரசியலுக்குள் இழுத்து, எதிர்காலத்தை சிந்திக்க வைத்த விஜய்க்கு தான் , என் முதல் ஆதரவு.

Source link