எம்.ஜி.ஆர் போன்ற மனிதநேயமிக்க முதலமைச்சர் விஜய் – நெகிழ்ச்சியுடன் புகழ்ந்த சபாநாயகர் ஜேசிடி – காரணம் என்ன? – vijay is a humanitarian chief minister like mgr said to speaker jcd prabhakar

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பேசுகையில், மருத்துவத்துறையில் உள்ள பல்வேறு பிரிவுகளும், துறைகளும் வெவ்வேறு கோணங்களில் பரிந்துரைகளை வழங்கினாலும், அவை அனைத்தின் ஒரே நோக்கம் மக்களின் இதயத்தைப் பாதுகாப்பது என்பதாகவே வளர்ந்திருக்கிறது. இதை நான் வாழ்த்துக்களுடன் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஜனவரி 2ஆம் தேதி நான் இந்த இயக்கத்தில் இணைந்தபோது முதலமைச்சரைச் சந்தித்தேன்.

தமிழ்நாடு மருத்துவத்துறை மறுமலர்ச்சி

சந்திப்பு முடிந்து வெளியே வந்த என்னிடம் செய்தியாளர்கள் கேட்டபோது மீண்டும் ஒரு எம்.ஜி.ஆரை சந்தித்த மகிழ்ச்சி எனக்குள் இருக்கிறது’ என்று கூறினேன். அதற்கு காரணம் அவரிடம் இருக்கும் பொதுநலம், உயர்ந்த நோக்கம் மற்றும் தன்னலமற்ற பிறர் நலன் பேணும் பண்புதான். மக்களின் தேவைகளை நன்கு உணர்ந்து, மக்கள் என்ன நினைக்கிறார்களோ அதைச் செய்ய வேண்டும் என்ற உந்துசக்தி அவரிடம் இருக்கிறது என்று கூறினார்.

Work ஆகுமா பொது வேட்பாளர் Concept? திமுக போடும் கணக்கு Discussed!

ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மக்களின் எதிர்பார்ப்புகள் ஏராளமாக இருப்பதை முதலமைச்சர் நன்கு கவனித்து வருகிறார் என்று குறிப்பிட்ட அவர் சட்டசபையில் முதலமைச்சர் பேசும்போது எனக்குக் கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள் எனக் கேட்டார். சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும் என்பார்கள். அரசிடம் என்ன நிதி நிலைமை இருக்கிறது என்பதை வெள்ளை அறிக்கை மூலமாக ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டார்கள்.

எம்.ஜி.ஆர் போன்ற மனிதநேயமிக்க முதலமைச்சர் விஜய்

இப்போது இதனை இதனால் இவன்முடிக்கு மென்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்
என்ற வள்ளுவனின் வாக்குக்கு ஏற்ப தகுதியான நபர்களை தகுதியான இடங்களில் அமர்த்தி முதலமைச்சர் அழகு பார்க்கிறார் எனப் பாராட்டினார்.

தொடர்ந்து பேசியவர் நமது மருத்துவத்துறை அமைச்சர் ஒரு மருத்துவரே ஆவார். ஸ்டெதாஸ்கோப் வைத்து நாடித் துடிப்பைப் பார்ப்பதோடு அவரது வேலை நின்றுவிடவில்லை. விபத்து அல்லது அவசர காலத்தில், அந்த கோல்டன் அவர் எனப்படும் பொன்னான நேரத்திற்குள் ஒரு உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற முனைப்போடு அவர் செயல்படுகிறார்.

அவர் பொறுப்பேற்ற நாள் முதல் ஒவ்வொரு நாளும் மருத்துவத்துறையில் புதிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. மருத்துவத்துறையில் மட்டுமன்றி தமிழ்நாட்டின் அனைத்துத் துறைகளிலும் லஞ்ச லாவண்யமற்ற, ஊழலற்ற, தடைகள் இல்லாத வெளிப்படையான நிர்வாகத்தை இந்த அரசு நடத்தி வருவதை ஊடகங்கள் வாயிலாக மக்கள் பார்க்க முடிகிறது” என்றார்.

நெகிழ்ச்சியுடன் புகழ்ந்த சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்

தேர்தல் அறிக்கை தயாரிக்கும் கூட்டத்தில், தற்போதைய அமைச்சர் சுமார் ஒரு மணி நேரம் பல்வேறு ஊர்களுக்குச் சென்றது குறித்தும், அங்கு நடத்திய ஆய்வுகள் குறித்தும் பேசிக்கொண்டே இருந்தார். முதலமைச்சரோ தலையைக் குனிந்து ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். ஆனால், அமைச்சர் பேசி முடித்ததும் தலைநிமிர்ந்து பார்த்த முதலமைச்சர் நீங்கள் ஒரு மணி நேரம் பேசியதில் இந்த 8 புள்ளிகள் தான் மிக முக்கியமானது’ என்று நொடியில் சுட்டிக்காட்டினார். தகவல்களை உடனுக்குடன் உள்வாங்கிக் கொள்ளும் ஆற்றல்மிக்க முதலமைச்சராக அவர் திகழ்கிறார்.

நிறைவாகப் பேசிய அவர், லட்சிய வேட்கை கொண்ட முதலமைச்சருக்குப் பக்கபலமாக, தூய உள்ளத்தோடு உழைக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் போன்ற ஒரு நல்ல அமைச்சரவை அமைந்திருப்பது தமிழகத்திற்குப் பெருமை அளிப்பதாகக் கூறி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

Source link