எர்லிங் ஹாலந்து 'ஹாட்ரிக்'

மான்செஸ்டர்: இங்கிலாந்தின் மான்செஸ்டரில் நடந்த எப்.ஏ. கோப்பை கால்பந்து 145வது சீசனுக்கான காலிறுதியில் மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் அணிகள் மோதின. இதில் எர்லிங் ஹாலந்து ‘ஹாட்ரிக்’ கோல் அடித்து கைகொடுக்க மான்செஸ்டர் சிட்டி அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. புல்ஹாமில் நடந்த காலிறுதியில் செல்சி அணி 7-0 என, போர்ட் வேல் அணியை வென்றது. சவுத்தாம்ப்டன் அணி 2-1 என ஆர்சனல் அணியை தோற்கடித்தது.

பைனலில் பெகுலா

சார்லஸ்டன்: அமெரிக்காவில், டபிள்யு.டி.ஏ., சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, இவா ஜோவிச் மோதினர். இதில் ஜெசிகா 6-4, 5-7, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு அரையிறுதியில் அமெரிக்காவின் மடிசன் கீஸ் 1-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் உக்ரைனின் யூலியாவிடம் தோல்வியடைந்தார்.

பார்சிலோனா முதலிடம்

மாட்ரிட்: ஸ்பெயினில், ‘லா லிகா’ கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் பார்சிலோனா அணி 2-1 என, அத்லெடிகோ மாட்ரிட் அணியை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 1-2 என, மல்லோர்கா அணியிடம் தோல்வியடைந்தது. புள்ளிப்பட்டியலில் பார்சிலோனா (76 புள்ளி), ரியல் மாட்ரிட் (69) முதலிரண்டு இடங்களில் உள்ளன. இன்னும் 8 போட்டிகள் மீதமுள்ள நிலையில், கூடுதலாக 7 புள்ளி பெற்றுள்ள பார்சிலோனா அணிக்கு கோப்பை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

எக்ஸ்டிராஸ்

* டில்லியில் நடந்த ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் ஸ்போர்டிங் கிளப் டில்லி அணி 2-0 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தியது.

* ராஞ்சியில் நடக்கும் சப்-ஜூனியர் பெண்கள் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் 16வது சீசனுக்கான லீக் போட்டியில் உத்தரகாண்ட் அணி 9-2 என, குஜராத்தை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் பெங்கால் அணி 2-3 என, அசாமிடம் தோல்வியடைந்தது. பஞ்சாப் அணி 2-0 என, ஆந்திராவை வென்றது.

* ஸ்பெயினின் கிரானடாவில், உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் (‘ரைபிள்”https://www.dinamalar.com/”பிஸ்டல்’) தொடர் இன்று துவங்குகிறது. இந்தியா சார்பில் விஜய்வீர் சித்து, மெகுலி கோஷ், அஞ்சும், ரிதம் சங்வான், தனுஷ் ஸ்ரீகாந்த், அர்ஷ்தீப் சிங், முகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

* ஜப்பானில் நடந்த சர்வதேச கோல்ப் தொடரில் இந்திய வீரர் கரன்தீப் கோச்சர், தலா 272 புள்ளிகளுடன் 5வது இடத்தை தென் கொரியாவின் ஹாங்டேக் கிம் உடன் பகிர்ந்து கொண்டார். ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஸ்மித் (269) சாம்பியன் பட்டம் வென்றார்.

Source link