எலுமிச்சை கிடைத்தால் வேட்பாளர்: என்.ஆர் காங்கிரசில் அதிசயம்

வி ருப்ப மனு, நேர்காணல், செலவுக்கான பெட்டிகள், இறுதியில் வேட்பாளர்
பட்டியல் என்பதுதான் இப்போது வரை தேர்தல் களத்தில் பின்பற்றப்படும்
நடைமுறை. ஆனால் புதுச்சேரி என்.ஆர்.காங்.,கில், விருப்ப மனுக்கள் எதுவும்
இதுவரை பெறப்பட்டது இல்லை. வேட்பாளர்களுக்கு நேர்காணலும் நடத்தப்பட்டது
கிடையாது. எனில், வேட்பாளர் தேர்வு எப்படி நடக்கிறது?

என்.ஆர்.
காங்., கட்சியின் வேட்பாளர்கள், பூர்த்தி செய்யப்பட்ட வேட்பு மனுக்களுடன்,
முதல்வர் ரங்கசாமியின் வீட்டுக்கு அருகில் அமைந்துள்ள அப்பா பைத்தியம்
சுவாமி கோவிலுக்கு சென்று காத்திருப்பர்.

கோவிலில் பூஜையில்
இருக்கும் ரங்கசாமியிடம், வேட்பு மனு தாக்கலுக்கான விண்ணப்பத்தை
கொடுப்பர். கோவிலின் கருவறைக்குள் சென்று அப்பா பைத்தியம் சுவாமிக்கு,
ரங்கசாமியே நேரடியாக அபிஷேகம், பூஜைகள் நடத்தி, நைவேத்தியத்தை தன் கைகளால்
எடுத்து ஊட்டி விடுவார்.

பின், அப்பா பைத்தியம் சுவாமியிடம்
ரங்கசாமி தனியாக பேசிவிட்டு, சுவாமியின் உத்தரவுக்காக காத்திருப்பார்.
உத்தரவு கிடைத்ததும் கருவறையில் இருந்து வெளியே வரும் ரங்கசாமி, சுவாமி
அருள்வாக்கு கூறிய வேட்பாளருக்கு மட்டும் விபூதி பூசி எலுமிச்சம் பழம்
தருவார்.

ரங்கசாமி யாருக்கு எலுமிச்சை கொடுக்கிறாரோ அவரே,
சம்பந்தப்பட்ட தொகுதியின் என்.ஆர்.காங்., வேட்பாளராவார். என்.ஆர்.காங்.,
கட்சி ஆரம்பித்த 2011ல் இருந்தே இந்த நடைமுறை தான். இந்த தேர்தலிலும்
இப்படித்தான் வேட்பாளர்களுக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.

Source link