எலைட் குத்துச்சண்டை: அரையிறுதியில் பிரீத்தி

லா நுசியா: எலைட் குத்துச்சண்டை அரையிறுதிக்கு இந்தியாவின் பிரீத்தி, ஜடுமணி சிங் உள்ளிட்டோர் முன்னேறினர்.

ஸ்பெயினில், எலைட் சர்வதேச குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்களுக்கான 54 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பிரீத்தி பவார், ஸ்பெயினின் மரியாவை வீழ்த்தினார். இந்தியாவின் நீத்து (51 கிலோ), கனடாவின் மெக்கென்சி ரைட்டை தோற்கடித்தார்.

பெண்களுக்கான மற்ற எடைப்பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பூனம் (54 கிலோ), பிரியா (60), பிரஞ்சல் (65), காஜல் (65) வெற்றி பெற்றனர்.

ஆண்களுக்கான 55 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஜடுமணி சிங் 5-0 என, சீனதைபேயின் பெங் சியா-பெங்கை வீழ்த்தினார். இந்தியாவின் முகமது ஹுசாமுதீன் (60 கிலோ) 5-0 என, உக்ரைனின் அலி தஹ்லியை தோற்கடித்தார். ஆண்களுக்கான மற்ற எடைப்பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சச்சின் (60 கிலோ), ஆகாஷ் (75) வெற்றி பெற்றனர்.

இந்தியா சார்பில் 12 வீராங்கனைகள், 7 வீரர்கள் என, மொத்தம் 19 பேர் அரையிறுதிக்கு முன்னேறி, பதக்கத்தை உறுதி செய்தனர்.

Source link