மும்பை:பெருங்காய தயாரிப்பு மற்றும் ஏற்றுமதியில் முன்னணியில் உள்ள எல்.ஜி., என்றழைக்கப்படும் ‘லால்ஜி கோது அண்டு கம்பெனி’, இந்தியாவின் அதிக நம்பிக்கை பெற்ற பிராண்டு என்ற விருதை பெற்றுள்ளது.
டீம் மார்க்ஸ்மென் நெட் வொர்க் வழங்கிய இந்த விருது விழா மும்பையில் நடைபெற்றது.
இந்த விருதை எல்.ஜி., யின் பங்குதாரர் கர்ணா ஏ.வஹாலியா மற்றும் விற்பனை பிரிவு தலைவர் வினோத் கெய்க்வாட், நிதி மற்றும் கணக்கு தலைவர் சச்சின் பி.ஜெயின் ஆகியோர் பெற்று கொண்டனர்.
இதுகுறித்து நிர்வாகத்தினர் தெரிவித்ததாவது:
இந்த விருதை பெற்றதன் வாயிலாக தரம், சுத்தம் மற்றும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கை பெற்ற பிராண்டு என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்நேரத்தில் இந்தியா மற்றும் உலகம் முழுதும் உள்ள எங்களின் வர்த்தக பங்குதாரர்கள், வாடிக்கையாளர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
