எரிவாயு தட்டுப்பாடு காரணமாக ஸ்டீல் உற்பத்தி பாதிப்படைந்துள்ளதால், ஸ்டீல் ஆலைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் எல்.பி.ஜி.,யை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இஸ்ரேல் — ஈரான் போரால் எல்.பி.ஜி., பற்றாக்குறையால் சிறிய ஸ்டீல் உருக்காலைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிறு மற்றும் நடுத்தர உருக்காலைகளின் எரிவாயு வினியோகத்துக்கு செவிசாய்த்த மத்திய உருக்கு அமைச்சகம், பெட்ரோலிய அமைச்சகத்தை நாடியுள்ளன.
இன்ஜினியரிங் உற்பத்தி துறையில் ஸ்டீல் உருக்கின் முக்கியத்துவம்,உற்பத்தியின்போது எரிவாயுவின் பங்களிப்பையும் விளக்கி, இத்துறைக்கு எல்.பி.ஜி.,யை முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்துள்ளன. பற்றாக்குறை நீடித்தால் லாபம் குறைவது மட்டுமின்றி, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
