எல்.முருகன் ராஜினாமா எதரொலி – மாநிலங்களவை வேட்பாளர் ஹர்தீப் சிங் பூரி – hardeep singh puri announced as rajya sabha candidate after l.murugan resignation

எல்.முருகன் தனது மத்திய இணை அமைச்சர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளை அக்டோபர் 14 அன்று ராஜினாமா செய்தார். காலியாக உள்ள மாநிலங்களவை இடத்திற்கு நவம்பர் 12-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக இருந்த ஹர்தீப் சிங் பூரி தற்போது மத்தியப் பிரதேச இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்த

பிரதமர் நரேந்திர மோடிக்கு எல்.முருகன் எழுதிய 5 பக்க கடிதத்தில், அடிமட்டத் தொண்டர்களோடு இணைந்து தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்தவும், 2029 மக்களவைத் தேர்தலுக்கான களப்பணிகளில் முழு நேரமாக ஈடுபடவுமே ராஜினாமா முடிவை எடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். டெல்லியில் இருந்துகொண்டு நிர்வாகத்தைக் கவனிப்பதை விட, தமிழக அரசியலில் நேரடியாகக் களம் காண்பதே தனது விருப்பம் என அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரவை மாற்றம் (Cabinet Reshuffle)

மத்திய அமைச்சரவையில் விரைவில் ஒரு பெரிய மாற்றம் அல்லது மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதன் ஒரு பகுதியாகவே, எல்.முருகன் தனது பதவியை ராஜினாமா செய்ய அறிவுறுத்தப்பட்டிருக்கலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

நிர்வாகம் மற்றும் தனிச்செயலாளர் தொடர்பான புகார்கள்

எல்.முருகனின் ராஜினாமாவுக்குப் பின்னால் சில உள்கட்சிப் புகார்களும் இருந்ததாகக் கூறப்படுகிறது. எல்.முருகனின் உதவியாளரான கவியரசு என்பவரைப் பணியில் இருந்து நீக்க உத்தரவிடப்பட்டிருந்தும், பிரதமரின் சென்னை வருகையின் போது அவரைத் தொடர்ந்து எல்.முருகன் தன்னுடனே வைத்திருக்க அனுமதித்தது பிரதமரின் கவனத்திற்குச் சென்று அதிருப்தியை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

எல்.முருகன் வகித்த துறையைச் சேர்ந்த அஜித் தோவலின் உறவினர் பெண் அதிகாரி ஒருவர் அளித்த புகார் குறித்து பிரதமரின் அலுவலகம் (PMO) நடத்திய விசாரணையின் முடிவுகள், இந்த உடனடி ராஜினாமா முடிவுக்கு வழிவகுத்ததாகவும் தகவல்கள் உலா வருகின்றன.

தமிழக பாஜகவின் புதிய தலைமைக்கான வாய்ப்பு

தமிழக பாஜகவில் தற்போதைய தலைமை மற்றும் உட்கட்சி விவகாரங்கள் குறித்துப் பல்வேறு விவாதங்கள் நடந்து வரும் வேளையில், எல். முருகனின் இந்தத் திடீர் வருகை முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால் பாஜக மாநில தலைவராக இளைஞர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் கமலாலய வட்டாரங்கள் கூறுகின்றன.

எதுஎப்படியோ எல்.முருகன் எம்.பி. பதவிக்கு தமிழ்நாட்டில் இருந்து ஒரு எம்.பி. நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வடமாநிலத்தைச் சேர்ந்த ஹர்தீப் சிங் பூரியை எம்.பி.வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது.

Source link