எழும்பூர் தொகுதியில் ஏற்றம் பெறும் கட்சி எது?

அதே​போல், அதி​முக சார்​பில் அபிஷேக் ரங்​க​சாமி போட்​டி​யிடு​கிறார். இவர் தென்​சென்னை வடக்கு மாவட்ட எம்​ஜிஆர் இளைஞரணி செய​லா​ள​ராக இருக்​கிறார். தொகு​திக்கு பெரி​தாக பரிட்​ச​யம் இல்​லாதது இவருக்கு பின்​னடை​வாகப் பார்க்​கப்​படு​கிறது.

தவெக சார்​பில் கட்சியின் துணை பொதுச்​செய​லா​ளர் ராஜ்மோகன், நாம் தமிழர் கட்சி சார்​பில் சரண்யா ஆகியோ​ரும் களமிறங்​கு​கின்​றனர். கள நில​வரத்​தின்​படி நான்குமுனைப் போட்டியாக இருந்​தா​லும் அதி​முக, திமுக இடையே​தான் இங்கு கடும் போட்டி நில​வு​கிறது.

இந்த தொகு​தி​யில் அதி​கம் வசிக்​கும் தாழ்த்​தப்​பட்ட மக்​களே வெற்​றியை தீர்​மானிப்​பவர்​களாக உள்​ளனர். அதில் கணிச​மான வாக்​கு​களை தவெக பிரிக்​கும். மேலும், தவெக-வுக்கு தொகுதி முழு​வதும் பரவலாக ஆதரவு இருப்​ப​தை​யும் காண​முடிகிறது. இதனால் இம்​முறை வெற்றி வாய்ப்பு திமுக​வுக்கு எளி​தாக இருக்​காது என்று கூறப்​படுகிறது.

வாக்காளர்கள் விவரம்

ஆண்கள் – 65,677

பெண்கள் – 69,149

3-ம் பாலினத்தவர் – 53

மொத்த வாக்காளர்கள் – 1,34,879

Source link