‘எவ்வளவு செலவு பண்ணுவீங்க; காலி சேர்களுடன் விருப்ப மனு விநியோகம்!’ – அப்செட்டில் சசிகலா? |How Much Are You Spending?’ – Sasikala Displeased as Nomination Event Sees Empty Chairs”

திருத்தணி, ஆவடி, திருப்பெரும்புதூர், பூந்தமல்லி தொகுதிகளுக்கு ஒரு சிலர் விருப்ப மனுக்களை வாங்கியிருந்தனர். அவர்களும் “கூட்டமே இல்லாததால் அன்னபோஸ்டாக சீட் கிடைக்கும்’ என்று மகிழ்ச்சியாக கிளம்பிச் சென்றனர்.

விருப்ப மனுவில், ‘நீங்கள் போட்டியிட விரும்பும் தொகுதியில் தோராயமாக எவ்வளவு செலவாகும்? உங்களால் சொந்தமாக எவ்வளவு செலவு செய்ய முடியும்? மீதத் தொகைக்கு என்ன செய்வீர்கள்?’ என்று ஒரு கேள்வி அழுத்தம் திருத்தமாக கேட்கப்பட்டிருந்தது.

காலி சேர்கள்

காலி சேர்கள்

‘அது என்ன தேர்தல் செலவா சார் கேட்குறாங்க…’ என பேச்சுக் கொடுத்தால்…’வாய்ல அடிங்க…வாய்ல அடிங்க…அது ‘புரட்சி நிதி’ என்கின்றனர் சசிகலா ஆதரவாளர்கள்.

விருப்ப மனு விநியோகம் ஆரம்பித்த 1 மணி நேரத்தில் 51 மனுக்கள் மட்டுமே விநியோகம் செய்யப்பட்டிருக்கிறது. எதிர்பார்த்த கூட்டம் இல்லாததால் சசிகலா கடும் அப்செட் என்கின்றனர் அ.இ.பு.த.ம.மு.க கட்சி வட்டாரத்தினர்

Source link