புதுடில்லி: எஸ்.இ.இசட்., எனும் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இயங்கும் நிறுவனங்கள், உள்நாட்டு சந்தையிலும் பொருட்களை விற்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த தளர்வு ஒரு குறுகிய காலத்துக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும், சிறப்பு பொருளாதார மண்டலங்களின் கவனம் ஏற்றுமதியாகவே இருக்கும் எனவும் மத்திய வருவாய் துறை செயலர் அரவிந்த் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.
சர்வதேச வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்ள, இது ஒரு தற்காலிக முயற்சி மட்டுமே என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த சிக்கல்களுக்கு விரைவில் தீர்வு காணப்பட்டு, ஏற்றுமதி இயல்பு நிலைக்கு திரும்பும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
எஸ்.இ.இசட்., நிறுவனங்களின் ஏற்றுமதிக்கு தகுந்தாற்போல், குறிப்பிட்ட அளவு பொருட்களை உள்நாட்டில் விற்பனை செய்ய அனுமதிக்கும் வகையில், சுங்க வரி சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
