எஸ்.ஐ.ஆர் தேர்தல் முடிவுகளை மாற்றியதா?: ஞானேஷ் குமாரை பதவிநீக்கம் செய்ய வேண்டும்- குடியரசுத் தலைவருக்கு ஸ்டாலின் கோரிக்கை – dmk stalin urges president of india droupadi murmu for remove cec gyanesh kumar

இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட எஸ்.ஐ.ஆர். நடைமுறை கடந்த சில நாட்களுக்கு முன்னர் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், தீராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்டாலின் எஸ்.ஐ.ஆர். குறித்து கேள்வி எழுப்பியும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய கோரிக்கை வைத்தும், இந்திய குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பியுள்ளார்.

97 இலட்சம் வாக்காளர்கள் பட்டியலில் ஏன் இல்லை?

வாக்காளர் நீக்கங்கள் தேர்தல் முடிவுகளை மாற்றியதா?

தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை எங்கே?

இவை வெறும் கேள்விகளல்ல குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், இவரி ஜனநாயகத்தின் அடித்தளத்தையே உலுக்கும் குற்றச்சாட்டுகள் என தெரிவித்துள்ளார்.

கோரிக்கைகள்

ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்ய நடவடிக்கை SIR ரத்து மீண்டும் வாக்குச்சீட்டு முறைஉள்ளிட்ட கோரிக்கைகளுடன் மாண்புமிகு குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பியுள்ளேன்.

வாக்குரிமை என்பது சலுகையல்ல எனவும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமை என தெரிவித்துள்ளார். மேலும் ஒவ்வொரு வாக்கும் கணக்கில் வர வேண்டும். ஒவ்வொரு வாக்காளரின் உரிமையும் காக்கப்பட வேண்டும் எனவும் நமது கேள்விகளுக்குப் பதில் வேண்டும், ஜனநாயகத்திற்கு நீதி வேண்டும் அவர் தெரிவித்துள்ளார்.

Source link