எஸ்.பி.ஐ., ரூ.6,338 கோடி செலுத்த ஐ.டி., நோட்டீஸ்

மும்பை வருமான வரியாக 6,338 கோடி ரூபாய் செலுத்த வலியுறுத்தி, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ.க்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது குறித்து பங்குச் சந்தையிடம் அவ்வங்கி தெரிவித்ததாவது:

2023 – 24ம் நிதி ஆண்டில் குறைவாக வரி செலுத்தியிருப்பதாக கூறி, 6,377.52 கோடி ரூபாயை வட்டியுடன் சேர்த்து செலுத்த சொல்லி, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மார்ச் 19ம் தேதியிடப்பட்ட அந்த நோட்டீஸ், வருமான வரிச்சட்டத்தின் 143(3), 144சி(3), 144பி, ஆகிய பிரிவுகளின் கீழ் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த வரி விதிப்பு தொடர்பாக மேல்முறையீட்டு அதிகாரிகளிடம் முறையிட திட்டமிட்டு உள்ளோம்.

ஏற்கனவே, கடந்த சில ஆண்டுகளாகவே இது போன்ற வரி தொடர்பான விவகாரங்களில் சட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம். வருமான வரித்துறை அனுப்பியுள்ள இந்த நோட்டீஸ், எங்கள் வணிக நடவடிக்கையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

இவ்வாறு வங்கி தெரிவித்துள்ளது.

செபி விதிகளின்படி, வங்கியின் நிதி நிலையில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய முக்கிய தகவல் என்பதால், இந்த விபரத்தை பங்குச்சந்தையிடம் எஸ்.பி.ஐ., முறைப்படி தெரிவித்து உள்ளது.

2023 – 24ல் குறைவாக வரி செலுத்தியிருப்பதாக கூறி, ரூ.6.377 கோடியை வட்டியுடன் சேர்த்து செலுத்த எஸ்.பி.ஐ.,க்கு வருமான வரி நோட்டீஸ்

Source link