இதைத் தொடர்ந்து, கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக, அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் ஏஎன்எஸ். பிரசாத்தை நீக்கி மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உத்தரவிட்டார். இந்நிலையில், அந்த ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்து, அவருக்கு மீண்டும் மாநில செய்தித் தொடர்பாளர் பொறுப்பை வழங்கி நயினார் நாகேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில், ‘பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏஎன்எஸ். பிரசாத், கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானதால் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் மீதான நீக்கம் ரத்து செய்யப்படுகிறது. அவர் மீண்டும் கட்சி மற்றும் தேர்தல் பணிகளை மிகவும் சிறப்பான முறையில் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
