நமது நிருபர்
தமிழகம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள். இன்று (பிப்ரவரி 19) நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகள் என்னென்ன?
அது எத்தனை மணிக்கு என்பது குறித்து ஓர் சிறப்பு அலசல். மேலும் தொடர்ந்து விவரங்களை அறிய தினமலர் இணையதளம் தொடர்ந்து படியுங்கள்.
* டில்லியில் இன்று காலை 10.35 மணிக்கு பிரதமர் மோடி இந்தியா ‘ஏஐ இம்பாக்ட் சம்மிட்’ டில் உரையாற்ற உள்ளார். ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன், முகேஷ் அம்பானி, பில் கேட்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். உலக தலைவர்கள் பங்கேற்கும் மிகப்பெரிய விழா இதுவாகும்.
* ரமலான் நோன்பு இன்று (பிப்., 19) முதல் தொடங்குகிறது. இன்று முதல் 30 நாட்களுக்கு இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள். பள்ளிவாசலில் ஏராளமான இஸ்லாமியர்கள் அதிகாலையில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.
* தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெற உள்ளது.
விவாதத்தில் இன்று முன்வைக்கப்படும் கேள்விகளுக்கு நாளை அமைச்சர்கள் பதிலுரை வழங்க உள்ளனர்.
இன்றைய போட்டிகள்
டி 20 உலக கோப்பை- லீக் சுற்று
* மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் காலை 11 மணிக்கு நடக்கும் போட்டியில் இத்தாலி- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.
* இலங்கை கொழும்புவில் மதியம் 3 மணிக்கு நடக்கும் போட்டியில் இலங்கை- ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.
* சென்னையில் இரவு 7 மணிக்கு நடக்கும் போட்டியில் ஆப்கானிஸ்தான்- கனடா அணிகள் மோதுகின்றன.
பெண்கள் 2வது டி 20 கிரிக்கெட்
அணிகள்: இந்தியா- ஆஸ்திரேலியா
இடம்: கான்பெரா
