ஏப்ரல் 1 முதல் PAN கார்டு விதிகள் மாற்றம்: தெரிந்துகொள்ளுங்கள்|New PAN Card Rules From Tomorrow

நாளை ஏப்ரல் 1-ம் தேதி. நாளை முதல் புதிய நிதி நடைமுறைகள் பல அமலுக்கு வர உள்ளன.

அப்படி பான் கார்டில் என்னென்ன மாற்றங்கள் வர உள்ளன என்பதை இங்கே பார்க்கலாம்.

பான் கார்டிற்கு புதிதாக விண்ணப்பிக்கும் போது…

நாளை முதல் பான் கார்டிற்கு விண்ணப்பிக்கும் போது, அடையாளம் மற்றும் வயது சான்றுக்குக் கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

இதற்கு பிறப்பு சான்றிதழ், வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ், பள்ளி சான்றிதழ், நீதிபதியால் வழங்கப்பட்ட பிரமாணப் பத்திரம் போன்ற ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம்.

இதுவரை ஆதார் கார்டு மட்டும் சமர்ப்பித்தால் போதும் என்றிருந்தது.

ஆதார் - பான் கார்டு

ஆதார் – பான் கார்டு

ஆதாரும், பான் கார்டும் ஒன்றுபோல…

இனி புதிதாக வழங்கப்படும் பான் கார்டுகளில் உள்ள தகவல்கள், ஆதார் கார்டில் உள்ளது போலவே இருக்கும்.

ஏற்கெனவே பான் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஆதார் தகவலுடன் ஒத்துப்போகவில்லை என்றால், அதை சரிசெய்ய அரசாங்கம் புதிதாக விண்ணப்பத்தை அறிமுகப்படுத்த உள்ளது.

Source link