வருகிற ஏப்ரல் 1-ம் தேதி முதல் வங்கி மற்றும் ஏ.டி.எம்களில் சில வங்கிகள் புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்த உள்ளன.
அவை…
> இனி HDFC வங்கி ஏ.டி.எம்களில் யு.பி.ஐ மூலம் இலவசமாக பணம் எடுப்பதற்கு லிமிட் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதாவது, டெபிட் கார்டு மூலம் ஏ.டி.எம்களில் பணம் எடுக்கக் கூடிய லிமிட்டுடனே இதுவும் சேர்க்கப்படுகிறது.
இரண்டும் சேர்ந்து நிர்ணயிக்கப்பட்டுள்ள லிமிட்டைத் தாண்டிவிட்டால், ரூ.23 ப்ளஸ் வரி கட்டணம் வசூலிக்கப்படும்.
> RuPay NCMC Platinum Domestic Debit card, RuPay NCMC Platinum International Debit card, RuPay Women Power Platinum Debit card, RuPay PNB Palaash Debit card- Recycled PVC Debit card, RuPay Business Platinum NCMC Debit card, MasterCard Platinum Debit card, VISA Gold Debit card மற்றும் PNB MasterCard Platinum Rise போன்ற PNB டெபிட் கார்டு வகைகளில், ஏடிஎம்மில் இருந்து ஒரு நாளைக்கு வருகிற 1-ம் தேதி முதல் ரூ.50,000 தான் எடுக்க முடியும்.
இதுவரை ரூ.1 லட்சம் வரை பணம் எடுக்க அனுமதிக்கப்பட்டிருந்தது.
RuPay Select Debit card, PNB RuPay Select Neo, PNB RuPay Select Excel, VISA Signature Debit card and MasterCard Business Debit card போன்ற கார்டுகளில் முன்பு ரூ.1.5 லட்சம் வரை ஏ.டி.எம்மில் இருந்து ஒரு நாளைக்கு பணம் எடுக்க முடியும்.
இனி ரூ.75,000 மட்டுமே எடுக்க முடியும்.
> பந்தன் வங்கி டெபிட் கார்டுகள் மூலம் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல், ஏ.டி.எம்களில் ஒரு மாதத்திற்கு மூன்று முறை மட்டுமே இலவச நிதி பரிவர்த்தனைகளும், ஐந்து முறை மட்டுமே இலவச நிதி அல்லாத பரிவர்த்தனைகளைச் செய்ய முடியும்.
இது பந்தன் வங்கி ஏ.டி.எம்களுக்கு மட்டுமே.
பிற வங்கிகள் ஏ.டி.எம்கள் என்றால், நிதி மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைகளை மெட்ரோ நகரங்களில் மொத்தமாக மூன்று முறையும், மெட்ரோ அல்லாத நகரங்களில் ஐந்து முறையும் பரிவர்த்தனை செய்ய முடியும்.
இந்த லிமிட்டுகளைத் தாண்டினால் நிதி பரிவர்த்தனைகளுக்கு ரூ.23-உம், நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு ரூ.10-உம் வசூலிக்கப்படும்.
போதுமான நிதி இல்லாமல் பரிவர்த்தனைகள் ரத்தானால் ரூ.25 வசூலிக்கப்படும்.
பந்தன் வங்கி ஏ.டி.எம்களில் சில வகை கார்டுகளுக்கு இலவச பரிவர்த்தனை நடைமுறை தொடரும்.
பிற வங்கி ஏ.டி.எம்களில் எந்த வகையான வங்கிக் கணக்குடன் டெபிட் கார்டு இணைக்கப்பட்டுள்ளதோ, அதை பொறுத்து இலவச பரிவர்த்தனைகள் கிடைக்கும்.
