ஏர்டெல் உள்ளிட்ட 6 நிறுவனங்களின் சந்தைமதிப்பு ரூ.65,000 கோடி சரிவு

கடந்த வாரம் இந்திய பங்கு சந்தைகள் பெரிய அளவில் சரியவில்லை என்றாலும், டாப் 10 நிறுவனங்களில் 6ன் சந்தைமதிப்பு 64,734 கோடி ரூபாய் அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது புள்ளிவிபரங்களில் தெரியவந்துள்ளது.

மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள பணவீக்க கவலைகள் சந்தையைப் பாதித்துள்ளன. அத்துடன் அன்னிய முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி வருவதால், 6வது வாரமாக சந்தை சரிவிலேயே முடிந்தது. கடந்த வாரத்தில் சென்செக்ஸ் 263 புள்ளிகளும், நிப்டி 106 புள்ளிகளும் குறைந்தன. இந்த சூழலில், பார்தி ஏர்டெல், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி உள்ளிட்ட 6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

சரிவை சந்தித்த 6 நிறுவனங்கள்: நிறுவனங்கள் சந்தைமதிப்பு சரிவு (ரூ/கோடியில்) பார்தி ஏர்டெல் 29,993 ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி 12,845 பஜாஜ் பைனான்ஸ் 11,169 ஹெச்.டி.எப்.சி., வங்கி 7,822 ஹிந்துஸ்தான் யூனிலீவர் 2,349 எஸ்.பி.ஐ., 553

Source link