புதுடில்லி: ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கேம்பெல் வில்சன், பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார். ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் அவர் கூறியுள்ளதாவது:
உலகளாவிய வினியோக தொடர் சவால்கள், விமானங்கள் டெலிவரியில் தாமதம், புவிசார் அரசியல் பதற்றம், விமான எரிபொருள் விலையேற்றம், வான்வழி மூடல் என்று பல்வேறு சவால்களை எனது பணிக்காலத்தில் சந்தித்திருக்கிறேன். கடந்த 2025ல் நிகழ்ந்த விமான விபத்து, ஏர் இந்தியாவின் வரலாற்றில் கடுமையான காலம் ஆகும்.
முன்னெப்போதும் இல்லாத சவால்கள், ஒரு சோக நிகழ்வை சந்தித்த போதிலும் நாம் பலவற்றை சாதித்திருக்கிறோம்.
வரும் 2027ம் ஆண்டிலிருந்து 600 விமானங்களுக்கான ஆர்டர்களின் வினியோகம் துவங்க உள்ளது. ஏர் இந்தியா அடுத்த கட்டத்துக்கு தயாராகும் இவ்வேளையில் எனது பொறுப்புகளை ஒப்படைப்பது பொருத்தமானதாக இருக்கும். நிறுவனத்துக்கு புதிய தலைமை பொறுப்பேற்கும்வரை நான் பதவியில் தொடர்வேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
