குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு
நிப்டி 23,064.40 23,465.35 23,063.20 23,306.45
ஆரம்பத்தில் இருந்தே ஏற்றத்தில் நடைபெற்ற வர்த்தகத்தில் நாளின் இறுதியில் நிப்டி 394 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் ‘நிப்டி 100’ குறியீடு குறைந்தபட்சமாக 1.77 சதவீத ஏற்றத்துடனும்; ‘நிப்டி ஸ்மால்கேப் 50’ குறியீடு அதிகபட்சமாக 2.73 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் நிப்டி ஐ.டி., குறியீடு, குறைந்தபட்சமாக 0.08 சதவீத ஏற்றத்துடனும்; ‘நிப்டி கன்ஸ்யூமர் டியுரபிள்ஸ்’ குறியீடு அதிகபட்சமாக 3.51 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன.
வர்த்தகம் நடந்த 3,366 பங்குகளில், 2,423 ஏற்றத்துடனும்; 852 இறக்கத்துடனும்; 91 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. நிப்டியின் டிரெண்டில் பெரிய மாற்றம் உருவாகவில்லை. எனினும் ஆர்.எஸ்.ஐ., மற்றும் ஸ்டோக்காஸ்ட்டிக் ஓவர்சோல்டு என்ற நிலைமையில் இருந்து ரெக்கவரி ஆகும் தோற்றத்தை காட்டுகிறது. டெக்னிகலாக இது ஏற்றம் தொடர்வதற்கு இன்னும் வாய்ப்புள்ளது என்பதையே காட்டுகிறது. இதனால் 23,600 முதல் 23,900 வரை நிப்டி சென்று திரும்ப வாய்ப்புள்ள அதே நேரத்தில், ஒருவேளை செய்திகள் பாதகமாக இருந்து இறக்கம் வந்தால், மீண்டும் 22,800 லெவல்வரை சென்று திரும்புவதற்கும் வாய்ப்புள்ளது.
ஆதரவு 23,075 22,875 22,725
தடுப்பு 23,475 23,675 23,835
நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.)
நிப்டி50 (எண்ணிக்கை)
எட்டர்னல் 241.97 4.03
ஹெச்.டி.எப்.சி., பேங்க் 780.10 15.20
கோட்டக் மஹிந்திரா பேங்க் 370.40 3.55
டாடா ஸ்டீல் 196.78 5.99
ஐ.டி.சி., 295.75 4.50
நிப்டி மிட்கேப் 50 (எண்ணிக்கை)
எஸ் பேங்க் 18.51 0.44
சுஸ்லான் எனர்ஜி 42.23 1.19
ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க் 63.25 1.16
என்.எம்.டி.சி., 77.71 0.94
ஜி.எம்.ஆர்., ஏர்போர்ட்ஸ் 90.40 1.38
நிப்டி ஸ்மால்கேப் 50 (எண்ணிக்கை)
ஐநாக்ஸ் விண்டு 81.79 3.88
என்.பி.சி.சி., இந்தியா 84.40 2.55
பந்தன் பேங்க் 154.50 4.51
ஏஞ்சல் ஒன் 241.30 10.86
பிஜி எலெக்ட்ரோ பிளாஸ்ட் 516.10 14.40
மற்ற சில பங்குகளின் விலை விவரம்
அசோகா பில்ட்கான் 114.50 3.94
டி.சி.பி., பேங்க் 173.52 1.98
இன்ஜினியர்ஸ் இந்தியா 195.95 8.61
லெமன் ட்ரீ ஹோட்டல்ஸ் 107.50 1.34
ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா 151.10 5.37
*****
